- Advertisement -
இந்திய கிரிக்கெட்

பந்தை ரெண்டு பக்கமும் ஸ்விங் செய்றாரு.. அவரை டெஸ்ட் அணியிலும் சேருங்க.. இந்திய வீரருக்கு – வாசிம் அக்ரம் ஆதரவு

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அண்மையில் நடைபெற்று முடிந்த 2024-ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரை ஜெயித்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. இந்த தொடர் முழுவதுமே இந்திய அணியை சேர்ந்த அனைத்து வீரர்களும் தங்களது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த இந்திய அணி தோல்வியையே சந்திக்காமல் சாம்பியனானது.

குறிப்பாக இந்திய அணியின் பந்துவீச்சு இந்த தொடர் முழுவதுமே அசத்தலாக இருந்தது. ஒரு பக்கம் பும்ரா தனது கிளாசை காண்பிக்க மறுப்பக்கம் பாண்டியாவும் ஆல்ரவுண்டராக தனது சிறப்பான பங்களிப்பை வழங்கி இருந்தார்.

- Advertisement -

அதேவேளையில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கிய இளம் வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் எதிர்பார்ப்பை விட அதிகமாக தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். இந்த தொடர் முழுவதுமே அவரது பந்துவீச்சு அசத்தலாக இருந்தது.

நடைபெற்று முடிந்த டி20 உலககோப்பை தொடரில் 8 போட்டிகளின் விளையாடிய அர்ஷ்தீப் சிங் 17 விக்கெட்டுகளை வீழ்த்தி நடப்பு டி20 உலககோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலிலும் முதலிடத்தில் பிடித்து அசத்தினார். அதனால் அவரது இந்த செயல்பாட்டிற்கு பலரும் பாராட்டினை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் அர்ஷ்தீப் சிங் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் விளையாட வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரரான வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : அர்ஷ்தீப் சிங் என்னை மிகவும் கவர்ந்து விட்டார். பந்தை இருபுறமும் ஸ்விங் செய்யும் அவர் திறமையான வீரர். அவரிடம் நல்ல வேகமும் இருக்கிறது.

இதையும் படிங்க : விருதுக்கு தகுதியானவர்.. அவரை விட ஒரு சிறந்த பிளேயர் இருக்கார்ன்னு சொல்றது கஷ்டம்.. ரிக்கி பாண்டிங் பாராட்டு

இன் ஸ்விங், அவுட் ஸ்விங் இருவகையான பந்தையும் அவர் அற்புதமாக வீசுகிறார். புதிய பந்தில் அட்டகாசமாக வீசும் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்பதை மனதில் வைத்து செயல்பட வேண்டும். ஒரு நாள் கிரிக்கெட், டி20 கிரிக்கெட்டை தாண்டி டெஸ்ட் கிரிக்கெட் என்பது ஒரு பாரம்பரியமான முறை. எனவே அந்த வகையான போட்டிகளில் அவர் விளையாட வேண்டும் என்று வாசிம் அக்ரம் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -