6 வயது சிறுவனுக்கு பறிற்சியளிக்கும் வாசிம் அக்ரம் !

akram
- Advertisement -

பாகிஸ்தான் உலகின் மிகச்சிறந்த பந்துவீச்சாளர்களை உருவாக்கி கிரிக்கெட் உலகிற்கு தந்துள்ளது. இளம் வீரர்கள் தங்களின் திறமையை சமூகவலைத்தளங்களில் பதிவேற்றி வருவது வழக்கம்.அப்படி சமீபத்தில் பதிவேற்றப்பட்டு வேகமாக வைரலாகியது தான் ஆறுவயது சிறுவனான அசான் அக்தர் வீடியோ.தற்போது ஆறுவயதேயான பாகிஸ்தானிய சிறுவனான அசான் அக்தர் தான் தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் உலகின் ஹாட் டாபிக்.

- Advertisement -

7வயது கூட நிரம்பாத இந்த சிறுவனை கண்டு சுற்றுவட்டாரத்தில் தான் ஒரு கிரிக்கெட் ஜாம்பவான் என்று சொல்லிக்கொண்டு திரிபவர்களும் பம்முகின்றனர்.கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் கொண்டு இந்த இளம் சிறுவனின் பந்துவீச்சானது அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கின்றது.

இந்த சிறுவனின் பந்துவீச்சு திறமையை சமூகவலைத்தளங்களில் கண்டு உலக கிரிக்கெட் ஜாம்பவான்கள் பாராட்டியும், அறிவுரைகளையும் கூறிவருகின்றனர்.அந்தவகையில் பாகிஸ்தானின் வேகப்பந்துவீச்சாளரான வாசிம் அக்ரம் நேரடியாக இந்த சிறுவனை கண்டு அவனக்கு மேலும் சிறப்பாக பந்துவீச பயிற்சியளித்துள்ளார்.

வாசிம் அக்ரம் அந்த சிறுவனுக்கு பந்து வீச கற்றுத்தந்த புகைப்படங்களை பாகிஸ்தானிய நாளிதழான “தி சுல்தான் ஆப் ஸ்விங்” வெளியிட்டுள்ளது.இது குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள வாசிம் அக்ரம் “மிகவும் மகிழ்ச்சியான நேரம். அவனது திறமை ஆறரை வயது சிறுவனுக்கு இவ்வளவு திறமையா என என்னை ஆச்சரியப்பட வைத்தது” என்றார்.அசான் அக்தரின் பெற்றோர் விவசாய குடும்பத்தினரை சேர்ந்தவர்களாக இருப்பினும் இவனுக்கு கிரிக்கெட்டில் ஆர்வமிருப்பதை அறிந்து ஊக்கப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement