இந்த நேரத்தில் இந்த தொடர் நடத்துவது ரொம்ப அவசியமா ? ஐ.சி.சி க்கு எதிராக கேள்வி கேட்ட – வாசிம் அக்ரம்

Akram
- Advertisement -

16 சர்வதேச அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலக கோப்பை தொடர் ஏழாவது முறையாக வருகிற அக்டோபர் 18ஆம் தேதி முதல் நவம்பர் 15ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடத்த ஐசிசி திட்டமிட்டிருந்தது. இந்நிலையில் உலகம் முழுவதும் பரவி வந்த கொரோனோ வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த தொடர் தள்ளி வைக்கப்படலாம் என்று தெரிகிறது.

- Advertisement -

மேலும் அடுத்த ஆறு மாத காலங்களுக்கு ஆஸ்திரேலியாவிற்கு வான்வழிப் போக்குவரத்து இல்லை என்ற காரணத்தால் இத்தொடர் நடைபெறுவதற்கான சாத்தியம் குறைவு என்றே கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த தொடர் குறித்த முடிவு வருகிற பத்தாம் தேதி நடைபெற இருக்கும் ஐசிசியின் நிர்வாகிகள் கூட்டத்திற்கு பின்பு முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் இத்தொடர் குறித்து அளித்த பேட்டியில் கூறியதாவது : ரசிகர்களை அனுமதிக்காமல் டி20 உலகக் கோப்பை தொடரை நடத்தலாம் என்ற யோசனை சரியானது கிடையாது. ஏனெனில் ரசிகர்கள் இல்லாமல் உலக கோப்பை தொடரை எவ்வாறு நடத்த முடியும். உலக கோப்பை போட்டி என்றாலே மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கும்.

Cup

அந்த ரசிகர்களிடையே வீரர்கள் சிறப்பாக விளையாட வேண்டும் மேலும் உலகின் எல்லாப் பகுதிகளிலும் இருந்தும் வரும் ரசிகர்கள் தங்கள் அணிக்கு ஆதரவாக மைதானத்தில் காட்சி அளிப்பார்கள். அப்படி ரசிகர்கள் இன்றி பூட்டிய மைதானத்தில் போட்டி நடந்தால் இது போன்ற உற்சாகமான சூழ்நிலையை கொண்டு வர முடியாது. எனவே உலக கோப்பை போட்டியை நடத்த சரியான நேரத்திற்காக ஐசிசி காத்திருந்து முடிவெடுக்கும் என்று நம்புகிறேன்.

- Advertisement -

மேலும் கொரோனா வைரஸ் தாக்கம் முடிந்த பிறகு கட்டுப்பாடுகள் எளிமையாக பட்டால் அதன் பிறகு நம்மால் முறைப்படி உலக கோப்பையை நடத்த முடியும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் பந்தினை பளபளப்பாக எச்சிலை பயன்படுத்தக்கூடாது என்று ஐசிசி தற்காலிக தடைவிதித்துள்ளது. இதனை வேகப்பந்து வீச்சாளர்கள் நிச்சயம் விரும்பமாட்டார்கள். அதற்கு பதிலாக வியர்வையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.

IND-3

ஆனால் எச்சிலை போன்ற தாக்கத்தை வியர்வையால் ஏற்படுத்த முடியாது. எச்சிலை முதலில் பயன்படுத்திவிட்டு அதன் மீது சற்று வியர்வை பயன்படுத்தலாம். ஆனால் வியர்வை அதிகம் பயன்படுத்தினால் பந்து ரொம்ப ஈரப்பதம் ஆகிவிடும். எனவே இதற்கு தீர்வை கண்டறிந்து மாற்று வழியையும் அறிவிக்குமாறு வாசிம் அக்ரம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement