பாகிஸ்தான் அணிக்கு நான் கோச்சாக எப்போவும் இருக்க மாட்டேன். நான் முட்டாள் இல்ல – வாசிம் அக்ரம் ஓபன்டாக்

Akram

உலகின் தலை சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக திகழ்ந்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான வாசிம் அக்ரம், ஐபிஎல் தொடர் மற்றும் பாகிஸ்தான் ப்ரீமியர் லீக் போன்ற உள்ளூர் தொடர்களில் பல்வேறு அணிகளுக்காக பயிற்சியாளராக செயல்பட்டு வந்தாலும், தன்னுடைய தேச அணியான பாகிஸ்தான் அணிக்கு இதுவரை ஒரு முறைகூட பயிற்சியாளராக செயல்பட்டதில்லை. பலமுறை அந்த அணியின் பயிற்சியாளர் பதவி அவரை தேடி வந்தாலும், அதை அவர் நிராகரித்தே வந்துள்ளார். இதற்கான காரணம் என்னவென்று தற்போது அவர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் நாட்டின் இணையதளம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள அவர், பாகிஸ்தான் அணியில் விளையாடும் வீரர்களின் தவறான நடத்தைமுறை காரணமாகத்தான் நான் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் பதிவியை வேண்டாமென்று சொல்கிறேன் என்று கூறியுள்ளார். இது குறித்து மேலும் பேச அவர், பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு செல்லும் அளவிற்கு நான் ஒன்றும் முட்டாள் இல்லை. பாகிஸ்தான் அணியில் விளையாடும் வீரர்கள், தங்களது பயிற்சியாளர்களை மதிக்காமல் தவறான நடத்தையில் ஈடுபடுவதை, நான் கேட்டுக் கொண்டும் பார்த்துக் கொண்டும் தான் இருக்கிறேன்.

- Advertisement -

ஒரு பயிற்சியாளர் வீரர்களுக்கான திட்டத்தை தான் வகுத்து தருவார். அதற்கு மேலாக அவரால் களத்திற்குள் சென்று விளையாட முடியாது. போட்டியில் விளையாடப்போவது வீரர்கள் தான். எனவே அணி தோல்வியடைந்தால் அதற்கு பயிற்சியாளர்தான் பொறுப்பேற்க வேண்டும் என்பதில்லை என்று கூறிய அவர், இந்த ஒரு விடயத்திற்காகத்தான் நான் பயப்படுகிறேன். ஏனென்றால் நான் தவறான நடத்தைகளை மேற்கொண்டேன் என யாரும் என்மீது பழி சொல்வதை நான் விரும்ப மாட்டேன் என்று அவர் கூறியிருக்கிறார்.

akram 1

மேலும் பேசிய அவர், பாகிஸ்தான் அணி வீரர்கள் சோசியல் மீடியாக்களில் அணி நிர்வாகத்தைப் பற்றி தவறான கருத்துகளை கூறுவதைத் தவிர்த்து, தேச அணிக்காக அவர்கள் விளையாடுவதும், தேசப் பற்றுடன் இருப்பதைப் பர்த்தும் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்றும் அந்த பேட்டியில் அவர் கூறியிருக்கிறார்.

- Advertisement -

akram

கடந்த சில மாதங்களாகவே பாகிஸ்தான் அணியில் தற்போது விளையாடிக் கொண்டிருக்கும் வீரர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் என பலரும், அந்த அணியின் நிர்வாகத்தை பற்றியும், பயிற்சியாளரான மிஸ்பா உல் ஹக்கை பற்றியும் பல்வேறு விதமான விமர்ச்சனங்களையும், குற்றச்சாட்டுகளையும் அந்நாட்டு தனியார் கிரிக்கெட் இணையதளத்திற்கு பேட்டியாக அளித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement