பாண்டியாவும் இல்ல. பண்ட்டும் இல்ல. இந்திய அணியின் டேஞ்சரஸ் பேட்ஸ்மேன் இவர்தான் – வாசிம் அக்ரம் பேட்டி

Akram
- Advertisement -

கடந்த 17-ஆம் தேதி துவங்கிய டி20 உலககோப்பை தொடரானது தற்போது தகுதிச்சுற்று போட்டிகளை கடந்து சூப்பர் 12-சுற்றுக்குள் அடியெடுத்து வைக்கிறது. இனிவரும் போட்டிகள் மிகவும் சுவாரஸ்யமாக அமைய உள்ளதால் ரசிகர்களுக்கு இந்த தொடரானது பெரிய விருந்து என்றே கூறலாம். அந்த வகையில் நாளை விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதுகின்றன. உலக கிரிக்கெட்டில் மிகப்பெரிய போட்டியாக பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நாளை நடைபெறும் வேளையில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் குறித்த பல்வேறு கருத்துகளை முன்னாள் வீரர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

jadeja

- Advertisement -

அந்த வகையில் பாகிஸ்தான் அணியை சேர்ந்த முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் இந்திய அணி குறித்த தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்திய அணியில் தற்போது நிறைய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். ஆனால் இந்த டி20 உலக கோப்பையில் என்னை பொருத்தவரை இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் கேம் சேஞ்சராக இருப்பார். ஏனெனில் அவருடைய ஆட்டமே பவர் பிளே முடிந்து மிடில் ஓவர்களில் அதிரடியாக விளையாடுவதுதான்.

முதல் 6 ஓவர்களுக்குப் பின்பு மிடில் ஓவரில் எப்போதும் ரன்ரேட் குறையும். ஆனால் அந்த நேரத்தில் ரன் குவிப்பை வேகப்படுத்த சூர்யகுமார் யாதவ் சரியாக இருப்பார். இந்திய அணி கண்டுபிடித்த மிகச்சிறப்பான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் என்று அவரைக் கூறலாம். ஏனெனில் அவர் வித்தியாசமான பல ஷாட்டுகள் விளையாடுவதில் கில்லாடி. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக நான் பணியாற்றியபோது அவரைப் பார்த்திருக்கிறேன். தற்போது அவர் இன்னும் முதிர்ச்சி அடைந்த வீரராக மாறியுள்ளார்.

Sky

அவர் விளையாடும் பல வித்தியாசமான ஷாட்டுகள் பாதுகாப்பான முறையில் அடிக்கப்படுகின்றன. அதுமட்டுமின்றி மிடில் ஓவர்களில் அவரால் ரன் ரேட்டை நிச்சயம் அதிகப்படுத்த முடியும். எனவே இந்த உலக கோப்பை தொடரில் அவர் தான் இந்திய அணியின் கேம் சேஞ்சராக இருப்பார் என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி தொடர்ந்து பேசிய அவர் : இந்திய அணியின் ஆட்டங்களை நான் தொடர்ந்து பார்க்கவில்லை என்றாலும் முக்கியமான பெரிய ஆட்டங்களை பார்த்து வருகிறேன். அந்த வகையில் இந்திய அணி நிச்சயம் ஒரு பலம்வாய்ந்த அணி அதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை என்று வாசிம் அக்ரம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : கொரோனா அச்சத்தால் நின்ற 5 ஆவது டெஸ்ட் நடைபெறும் தேதி அறிவிப்பு – கிரிக்கெட் நிர்வாகம் வெளியிட்ட தகவல்

ஏற்கனவே இந்திய அணியில் துவக்க வீரர்களான ரோகித் மற்றும் ராகுல் ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி ரிஷப் பண்ட், பாண்டியா போன்ற அதிரடி ஆட்டக்காரர்கள் இந்திய அணியில் இருப்பது மேலும் பலத்தைத் தரும். அதோடு பந்துவீச்சிலும் தற்போது இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வருவதால் இந்த உலகக் கோப்பையை கைப்பற்றும் அணியாக இந்திய அணி பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement