INDvsENG : கொரோனா அச்சத்தால் நின்ற 5 ஆவது டெஸ்ட் நடைபெறும் தேதி அறிவிப்பு – கிரிக்கெட் நிர்வாகம் வெளியிட்ட தகவல்

INDvsENG
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை இங்கிலாந்தில் நடைபெற்றது. ஐ.சி.சி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கில் வரும் இந்த தொடரில் முதல் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 2 க்கு 1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றது. இதன்காரணமாக இந்திய அணி கடைசி டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து அணியை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் அந்த முக்கியமான 5-வது டெஸ்ட் போட்டித் துவங்குவதற்கு முன்னர் இந்திய பயிற்சியாளர் குழுவில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு காரணமாக 5வது டெஸ்ட் போட்டி கொரோனா அச்சம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இதன்காரணமாக இந்த 5-வது டெஸ்ட் போட்டியானது எப்போது நடைபெறும் ? என்று அனைவரும் கேள்வியெழுப்பினர்.

- Advertisement -

இந்நிலையில் அடுத்த ஆண்டு இந்த போட்டியானது நடைபெறும் என இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. செப்டம்பர் 10-ஆம் தேதி முதல் 14ம் தேதி வரை மான்செஸ்டர் நகரில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற இருந்த இந்தப் போட்டியானது கொரோனா அச்சம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

இந்த போட்டியானது அடுத்த ஆண்டு 2022 ஜூலை 1 ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை எட்ஜ்பாஸ்டன் நகரில் நடைபெற உள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : இந்தியா வேர்ல்டு கப்பை ஜெயிக்கும்னு எல்லாரும் நம்புறதுக்கு காரணம் இதுதான் – நாசர் ஹுசைன் ஓபன்டாக்

மேலும் அந்த சுற்றுப்பயணத்தில் இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளிலும் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கான அட்டவணையை இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் தங்களது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது. இதன் காரணமாக நின்றுபோன 5வது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற உள்ளது உறுதியாகியுள்ளது.

Advertisement