சச்சின் ரொம்ப கஷ்டம். ஆனா கோலிகிட்ட ரொம்ப ஈஸி. சச்சினுடன் கோலியை ஒப்பிட்ட அக்ரம் – விவரம் இதோ

- Advertisement -

கிரிக்கெட் உலகை பொறுத்தவரை இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டின் கடவுளாக பார்க்கப்படுகிறார். இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி உலக அளவில் இருக்கும் அவரது ரசிகர்கள் அவரை அப்படித்தான் கொண்டாடுகிறார்கள். அவருக்குப் பின்னர் பல வீரர்கள் வந்தாலும் சச்சினையே இன்றுவரை அவர்கள் கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக மதித்து வணங்குகின்றனர்.

sachin-kohli

- Advertisement -

ஆனால் கிரிக்கெட் உலகை பொறுத்தவரை யார் பெரியவர் என்பது எப்போதுமே ஒரு சர்ச்சைக்குரிய விடயமாக அவ்வப்போது இருந்து கொண்டே தான் வருகிறது. தோனி ரசிகர்களை வம்புக்கு இழுப்பதும், விராட் கோலி ரசிகர்கள் வேறு சில வீரர்களுடன் அவரை ஒப்பிட்டு பேசி விமர்சிப்பதும் தொடர்கதையாக நடந்து வருகிறது. இந்நிலையில் தற்போது பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் இந்திய வீரர்களான சச்சின் மற்றும் விராட் கோலி ஆகியவற்றை ஒப்பிட்டு சில விஷயங்களை பேசி உள்ளார்.

இதுகுறித்து அக்ரம் தனது யூடியூப் சேனலில் ஆகாஷ் சோப்ரா அவர்களுக்கு அளித்த பேட்டியில் : சச்சினுடன் விராட் கோலியை ஒப்பிட்டு பேசியுள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது : இருவரும் வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு விதமான வீரர்கள். கோலி மிகவும் ஆக்ரோஷமான வீரர், அதேசமயத்தில் நேர்மையானவரும் ஆவார். அவரது ஆட்டம் எப்போதும் பந்துவீச்சாளர்களை துன்புறுத்தும் விதமாகவே உள்ளது.

Akram

ஆனால் சச்சின் அமைதியாகவும் இன்னும் ஆக்ரோஷமாகவும் இருப்பார். மேலும் வித்தியாசமான உடல்மொழி உடையவர் எனவே அவருக்கு எதிராக நீங்கள் பந்துவீசும் போது நிறைய புரிந்து கொள்ள வேண்டியிருக்கும் என்று கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் நான் அவரை முயற்சித்து சறுக்கி விட்டால் அவர் இன்னும் உறுதியாக இருப்பார். இதனை சச்சினும் அறிவார் இது எனது புரிதல். நான் தவறாக கூட சொல்லி இருக்கலாம்.

- Advertisement -

ஆனால் ஒருவேளை நான் கோலியை சறுக்கி விட்டால் அவர் தனது மனநிலையை இழப்பார் எனவே ஒரு பேட்ஸ்மென் கோபப்படும் போது உங்களை தாக்குவார் அப்போதுதான் அவரை வெளியேற்றுவதற்கான அதிக வாய்ப்புகள் இருக்கும். அதனால் சச்சினை எந்த விதத்திலும் அவரது கவனத்தை சிதறடிக்கும் முடியாது என்றும் கோலியின் கவனத்தை எளிதில் சிதறடிக்கும் முடியும் என்றும் வாசிம் அக்ரம் ஒப்பிட்டு பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Sachin

அவர் கூறியபடி சச்சின் எந்தஒரு நிலையிலும் தனது நிதானத்தை இழக்காமல் பேட்டிங் செய்பவர். ஆனால் கோலியை பந்துவீச்சாளர்கள் சீண்டினால் அவர்களை அடிக்கும் பழக்கத்தை நாம் பலமுறை அவரது பேட்டிங்கில் பார்த்துளோம். இருப்பினும் தனது திறமையான பேட்டிங்கினால் அவர் கோபப்பட்டாலும் அவுட் ஆவது குறைவாகவே இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement