பாகிஸ்தான் அணி டி20 உலகக்கோப்பையை ஜெயிக்க சேன்ஸ்ஸே இல்ல – வாசிம் அக்ரம் வெளிப்படை

ஆடவருக்கான ஏழாவது டி20 உலக கோப்பை தொடரானது இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 18ஆம் தேதி தொடங்கி நவம்பர் மதம் 15ஆம் தேதி முடிவடைய இருக்கிறது. 2016ஆம் ஆண்டிற்கு பிறகு இப்போதுதான் டி20 உலக கோப்பை நடைபெற இருக்கிறது என்பதால், இந்த தொடரானது கிரிக்கெட் உலகில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான வாசிம் அக்ரம் இந்த உலக கோப்பையை கைப்பற்றுவதற்கு வாய்ப்புள்ள அணிகளாக, நான்கு அணிகளை தேர்வு செய்திருக்கிறார்.

அதில் அந்த நான்கு அணியில் தனது சொந்த நாடான பாகிஸ்தான் அணியை தேர்வு செய்யவில்லை. பாகிஸ்தான் அணியை தேர்வு செய்யாததற்கு விளக்கமளிக்கும் விதமாக பேட்டியளித்துள்ள அவர்,
பாகிஸ்தான் அணி உலக கோப்பையை கைப்பற்ற வேண்டுமானால், அவர்கள் முதலில் ஒரு அணியாக இணைய வேண்டும். ஒரு பாகிஸ்தான் ப்ரைஜயாக எனக்கும் அந்த அணி கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்றுதான் ஆசைபடுகிறேன்.

- Advertisement -

அது எங்கள் எல்லோருக்கும், குறிப்பாக பாகிஸ்தான் அணியின் இளம் கேப்டனுக்கும் இருக்கும் ஒரு கனவு. ஆனால் அதற்கு அவர்கள் அணியின் செயல்பாட்டை சிறந்ததாக மாற்ற வேண்டும். சிறந்த பதினோரு வீரர்கள் யார் என்பதை தேர்வு செய்ய வேண்டும் என்று கூறிய அவர், பாகிஸ்தான் அணியில் 5வது மற்றும் 6வது இடத்தை சரி செய்ய வேண்டி இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

Pak

இதற்கு முன்னராக உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள நான்கு அணிகளாக இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளை தேர்வு செய்த அவர், அந்த அணிகளில் இந்தியாவிற்கே அதிக வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார். இந்தியாவில் நடைபெறுவதாக இருந்த இந்த தொடர் கொரானா காரணமாக வேறு நாட்டிற்கு மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Pak-1

இது குறித்த முடிவை வருகிற ஜீன் மாதம் 01 ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் ஐசிசி எடுக்குமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சமீபகாலமாகவே பாகிஸ்தான் அணி கடைநிலை அணிகளுடனே வெற்றிபெற தடுமாறி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement