அந்த மாதிரி சூழல் கிடைச்சா இந்திய அணியை பாகிஸ்தானே 3 – 0ன்னு வீழ்த்தும்.. வாசிம் அக்ரம் அதிரடி கணிப்பு

Wasim Akram
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் முதல் முறையாக ஒரு டெஸ்ட் தொடரில் தோல்வியை சந்தித்துள்ளது. அது போக சொந்த மண்ணில் முதல் முறையாக ஒரு டெஸ்ட் தொடரில் முழுமையான ஒய்ட்வாஷ் தோல்வியையும் இந்தியா சந்தித்துள்ளது. இந்த தோல்விக்கு நியூசிலாந்து ஸ்பின்னர்களை இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக எதிர்கொள்ளாதது முக்கிய காரணமாக அமைந்தது.

அதன் காரணமாக 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு இந்தியா தகுதி பெறும் வாய்ப்பும் குறைந்துள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நவம்பர் நான்காம் தேதி துவங்கியது. அப்போட்டியில் இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் தோல்வியை சந்தித்தது பற்றி முன்னாள் வீரர்கள் விவாதித்தனர்.

- Advertisement -

பாகிஸ்தானே வீழ்த்தும்:

அதில் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் பேசியது பின்வருமாறு. “நான் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் டெஸ்ட் தொடரில் மோதுவதை பார்க்க விரும்புகிறேன்” என்று கூறினார். அதற்கு முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் வாசிம் அக்ரம் பதிலளித்தது பின்வருமாறு. “அது மிகப்பெரிய தொடராக இருக்கும். அது கிரிக்கெட்டை விரும்பும் இரு நாடுகளுக்கும் நல்லதாக இருக்கும்” என்று கூறினார்.

அதற்கு மைக்கேல் வாகன் பதிலளித்தது பின்வருமாறு. “ஒருவேளை இப்போது அந்த தொடர் நடைபெற்றால் சுழலுக்கு சாதகமான மைதானத்தில் இந்திய அணியை பாகிஸ்தான் தோற்கடிக்கும்” என்று கூறினார். அப்போது வாசிம் அக்ரம் பேசியது பின்வருமாறு. “கண்டிப்பாக சுழலுக்கு சாதகமாக மைதானங்களில் பாகிஸ்தான் அணியால் இந்தியாவை தோற்கடிக்க முடியும்”

- Advertisement -

வாசிம் அக்ரம் கருத்து:

“அவர்கள் தங்களுடைய சொந்த மண்ணிலேயே நியூசிலாந்தால் 3 – 0 என்ற கணக்கில் சுத்தியலால் அடிக்கப்பட்டுள்ளார்கள்” என்று கூறினார். அதாவது பாகிஸ்தான் அணியும் சமீப காலங்களில் வங்கதேசத்திடம் தோற்கும் அளவுக்கு சொந்த மண்ணில் மோசமாக செயல்பட்டு வந்தது. ஆனால் சுழலுக்கு சாதகமான மைதானத்தை அமைத்து 2 – 1 (3) என்ற கணக்கில் இங்கிலாந்துக்கு எதிராக கடந்த வாரம் பாகிஸ்தான் தொடரை வென்று சாதனை படைத்தது.

இதையும் படிங்க: இதுதான் உங்களுக்கு லாஸ்ட் சேன்ஸ்.. இந்திய அணியின் சீனியர் வீரர்களுக்கு எச்சரிக்கை – விவரம் இதோ

மறுபுறம் இந்திய அணி சுழலுக்கு சாதகமான மைதானங்களில் தடுமாறி வருகிறது. எனவே சுழலுக்கு சாதகமான சூழலில் இந்தியாவை எதிர்கொண்டால் கண்டிப்பாக 3 – 0 (3) என்ற கணக்கில் தற்போதைய பாகிஸ்தான் அணி வெல்லும் என்று வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். அந்த வகையில் 12 வருடங்கள் தொடர்ச்சியாக வென்று வந்த இந்திய அணி ஒரு தொடரில் தோற்றதால் இப்படி பல விமர்சனங்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement