40 வருஷத்துல ஒரு டீம் இப்படி விளையாடி இப்பதான் பாக்குறேன்.. ஆஹா ஓஹோன்னு பாராட்டிய – வாசிம் அக்ரம்

Akram
- Advertisement -

ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கெதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் வந்த டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே கடந்த நவம்பர் 22-ஆம் தேதி பெர்த் நகரில் துவங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியானது 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வைக்கிறது.

இந்தியா செய்தது தரமான சம்பவம் :

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது டிசம்பர் 6-ஆம் தேதி அடிலெய்டு மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக துவங்க உள்ளது. இந்நிலையில் இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி மிகப்பெரிய சிக்கலை சந்திக்கும் என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.

- Advertisement -

ஆனால் முதல் போட்டியிலேயே 295 ரன்கள் என்கிற பெரிய வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று அனைவரது மத்தியிலும் பாராட்டினை குவித்து வருகிறது. அந்த வகையில் இந்திய அணி பெற்ற இந்த வெற்றி குறித்து பாராட்டி பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான வாசிம் அக்ரம் கூறுகையில் :

கடந்த 40 ஆண்டுகளில் இந்தியா போன்று ஒரு அணி வெளிநாடுகளில் இப்படி ஒரு வெற்றியை பெற்று நான் பார்த்ததில்லை. ஏனெனில் ஆஸ்திரேலியா போன்ற கடினமான ஆடுகளங்களில் அந்த நாட்டு அணிக்கு எதிராக விளையாடுவது என்பதே பெரிய விஷயம். அப்படி ஒரு சூழலில் இந்திய அணி பெர்த் நகரில் இதுவரை தோல்வியே சந்திக்காத ஆஸ்திரேலியா அணியை அந்த மைதானத்தில் இவ்வளவு பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது உண்மையிலேயே மிகச்சிறந்த விஷயம்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக ரோகித் சர்மா, சுப்மன் கில் போன்ற வீரர்கள் இல்லாமலேயே பும்ரா தலைமையில் இளம் வீரர்களைக் கொண்ட அணி இப்படி ஒரு வெற்றியை ருசித்ததை நான் மிகப்பெரிய வெற்றியாக கருதுகிறேன். அதேபோன்று இந்திய அணியில் இடம் பிடித்து விளையாடிய அனைவரும் தங்களது பங்களிப்பை மிகச் சரியாக செய்திருந்தனர்.

இதையும் படிங்க : எங்களுக்கு தேவையான அது கிடைச்சுடுச்சு.. ஆஸி பிரதமர் அணியை வீழ்த்தியது பற்றி கேப்டன் ரோஹித் பேட்டி

நடைபெற்று முடிந்த இந்த பெர்த் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை கட்டுக்குள் வைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றும் வெற்றி ஒன்றே இலக்கு என்று தொடர்ந்து இந்திய அணி முழு முனைப்புடன் செயல்பட்டதாலே இந்த வெற்றி அவர்களுக்கு கிடைத்தது என வாசிம் அக்ரம் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement