இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பல வருடங்களாக எல்லை பிரச்சனை நிலவி வருகிறது. அது சாதாரண விளையாட்டான கிரிக்கெட்டிலும் பல வருடங்களாக எதிரொலித்து வருகிறது. குறிப்பாக 2008 மும்பை தாக்குதலுக்கு பின் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுவதை இந்தியா மொத்தமாக நிறுத்தியுள்ளது. அத்துடன் 2012க்குப்பின் பாகிஸ்தானுடன் இருதரப்பு தொடர்களின் விளையாடுவதை இந்தியா மொத்தமாக நிறுத்தியது.
இதற்கிடையே ஐபிஎல் தொடரில் பாகிஸ்தானை சேர்ந்த வீரர்கள் விளையாடுவதற்கு விதிக்கப்பட்ட தடை இன்னும் நீடிக்கிறது. அதே சமயம் ஐசிசி மற்றும் ஆசிய கோப்பைகளில் மட்டும் பாகிஸ்தான் அணியுடன் இந்தியா பொதுவான இடத்தில் விளையாடி வருகிறது. அந்த சூழ்நிலையில் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் நிகழ்த்திய தாக்குதலில் 26 இந்தியர்கள் இயற்கை எய்தினார்கள்.
15 வருடமாக தடை:
அதற்கு பதிலடியாக 2025 ஆசியக் கோப்பையில் பாகிஸ்தான் அணியுடன் கைகுலுக்காமல் இந்தியா வெளியேறியது பெரிய சர்ச்சையானது. அதற்கு பழி வாங்கும் நோக்கத்தில் இந்தியா வென்ற கோப்பையை கொடுக்காத பாகிஸ்தான் மற்றும் ஆசிய கவுன்சில் தலைவர் மோசின் நக்வி கையோடு எடுத்துச் சென்றார். அது பற்றி நவம்பர் 5, 6, 7 ஆகிய தேதிகளில் நடைபெறும் உயர்மட்ட கூட்டத்தில் ஐசிசியிடம் புகார் அளிக்க உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்நிலையில் விளையாட்டில் இந்தியா அரசியல் செய்வது நிறுத்தப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம் கேட்டுக் கொண்டுள்ளார். குறிப்பாக ஐபிஎல் தொடரில் 2011 முதல் 15 வருடங்களாக பாகிஸ்தான் வீரர்களுக்கு விளையாட இந்தியா தடை விதித்துள்ளதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார். எனவே இந்த விவகாரத்தில் ஐசிசி தலையிட்டு இந்தியாவின் ஒரு தலைப்பட்சபோக்கை நிறுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அக்ரம் கோரிக்கை:
இது பற்றி வாசிம் அக்ரம் பேசியது பின்வருமாறு. “மன்னிக்கவும். நேரடியாக சொல்கிறேன். கிரிக்கெட்டில் அரசியல் செய்வதை நான் பார்க்க விரும்பவில்லை. விளையாட்டை அரசியலில் இருந்து தூரமாக வைத்திருக்க வேண்டும். லீக் கிரிக்கெட்டில் அனைத்து நாடுகளிலும் இருந்து வீரர்களை தேர்ந்தெடுங்கள்”
இதையும் படிங்க: மீண்டும் இந்திய அணிக்கு திரும்பிய ரிஷப் பண்ட்.. அதுவும் அதே பவரோட கெத்தோடு ரிட்டர்ன் – வெளியான அறிவிப்பு
“தைரியமாக பெருந்தன்மையான பெரியவராக இருங்கள். ஆனால் துரதிஷ்டவசமாக அது நடக்கவில்லை. அங்கே தான் ஐசிசி வரவேண்டும் என்று நினைக்கிறேன். லீக் தொடரை யார் சொந்தமாக வைத்திருக்கிறார்கள் என்பது முக்கியமில்லை. யார் டி20 லீக் அணிகளை சொந்தமாக வைத்திருக்கிறார்கள் என்பது முக்கியமில்லை. ஒவ்வொரு நாட்டிலும் இருந்து வீரர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று கூறினார்.



