மீண்டும் இந்திய அணிக்கு திரும்பிய ரிஷப் பண்ட்.. அதுவும் அதே பவரோட கெத்தோடு ரிட்டர்ன் – வெளியான அறிவிப்பு

Rishabh Pant
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின் போது காலில் காயமடைந்து அந்த டெஸ்ட் தொடரின் ஐந்தாவது போட்டியை தவறவிட்டார். பின்னர் தனது காலில் ஏற்பட்ட காயத்திற்கான அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி தற்போது ரஞ்சி கோப்பை போட்டிகளில் விளையாடி வருகிறார்.

இந்திய அணிக்கு திரும்பிய ரிஷப் பண்ட் :

இதன் காரணமாக அவர் மீண்டும் இந்திய அணிக்கு விரைவில் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் காயத்தால் பாதிக்கப்பட்ட அவர் தற்போது முழு உடற்தகுதியை எட்டிய பின்னர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவது உறுதியாகி உள்ளது. அதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பும் முறைப்படி தற்போது வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது வரும் நவம்பர் 14-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெறவுள்ள வேளையில் இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இன்று பி.சி.சி.ஐ-யின் மூலம் அதிகாரபூர்வமாக வெளியாகியது.

இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ரிஷப் பண்ட் மீண்டும் துணை கேப்டன் என்கிற பதவியோடு பவராகவும், கெத்தாகவும் திரும்பி உள்ளார். ஏனெனில் இங்கிலாந்து தொடர் முடிந்த கையோடு நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் காயம் காரணமாக அவர் இடம்பெறாத வேளையில் ரவீந்திர ஜடேஜா துணை கேப்டனாக செயல்பட்டிருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் மீண்டும் டெஸ்ட் அணிக்கு ரிஷப் பண்ட் திரும்பியுள்ள வேளையில் அவருக்கு துணை கேப்டன் பதவி மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இரண்டு மாதங்கள் இடைவெளிக்கு பின்னர் மீண்டும் ரிஷப் பண்ட் கிரிக்கெட் களத்திற்கு திரும்புகிறார். அவரது வருகை காரணமாக இந்த டெஸ்ட் தொடரின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க : தெ.ஆ அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு – 15 பேர் கொண்ட லிஸ்ட் இதோ

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியானது நவம்பர் 14-ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் துவங்க உள்ளது. இந்த டெஸ்ட் தொடருக்கான 15 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலும் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement