- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அதுக்கு அப்றமும் இந்தியாவை ஜெய்க்க வெச்ச சிராஜ்.. இனிமேலும் துணை பவுலர் கிடையாது.. வாசிம் அக்ரம்

இங்கிலாந்து மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடிய 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 – 2 என்ற கணக்கில் சமன் செய்தது. அதிலும் ஓவல் மைதானத்தில் விளையாடிய கடைசிப் போட்டியில் கடைசி நாளில் இங்கிலாந்துக்கு 35 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. மறுபுறம் இந்தியாவுக்கு 4 விக்கெட்டுகள் தேவைப்பட்டதால் கண்டிப்பாக தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் கடைசி நாளில் கில்லியாக செயல்பட்ட இந்திய அணி மேற்கொண்டு 28 ரன்கள் மட்டுமே கொடுத்தது. அதனால் 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியாவின் வெற்றிக்கு மொத்தம் 9 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய முகமது சிராஜ் ஆட்டநாயகன் விருதை வென்றார். குறிப்பாக முந்தைய நாளில் ஹாரி ப்ரூக் கொடுத்த கேட்ச்சை பிடித்த சிராஜ் பவுண்டரி எல்லையில் காலை வைத்து சிக்சராக மாற்றினார்.

- Advertisement -

சப்போர்ட் பவுலர் கிடையாது:

அதைப் பயன்படுத்திய ஹாரி ப்ரூக் 111 (98) ரன்கள் விளாசி கிட்டத்தட்ட இந்தியாவை தோல்வியின் குழிக்குள் தள்ளினார். இருப்பினும் அதற்காக அசராத சிராஜ் கடைசி நாளில் 3 விக்கெட்டுகள் எடுத்து இந்தியாவுக்கு மிராக்கள் வெற்றியை பெற்றுக் கொடுத்தார். இந்நிலையில் கேட்ச் விட்ட பின்பும் மனம் தளராமல் போராடி இந்தியாவை வெற்றி பெற வைத்த சிராஜ் இனிமேலும் துணை பவுலர் கிடையாது என்று பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம் பாராட்டியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சிராஜ் வெற்றிக்கான பசி மற்றும் ஆர்வத்தால் நிறைந்துள்ளார். அது அற்புதமான முயற்சி. 5 போட்டிகளில் சுமார் 186 ஓவர்கள் வீசிய அவர் கடைசி நாளிலும் நெருப்பாக பந்துகளை வீசியது அவருடைய ஸ்டமினா மற்றும் மனதளவிலான பலத்தைக் காண்பிக்கிறது. இனிமேலும் அவர் வெறும் சப்போர்ட் பவுலர் கிடையாது”

- Advertisement -

ஜாம்பவான் பாராட்டு:

“சிராஜ் தன்னுடைய இதயத்திலிருந்து பௌலிங் துறையை முன்னோக்கி வழி நடத்துகிறார். ஹாரி ப்ரூக் கேட்ச்சை தவற விட்ட பின்பும் அவர் தன்னுடைய கவனத்தை இழக்கவில்லை. அது ஒரு போராளியின் குறியாகும். டெஸ்ட் கிரிக்கெட் இப்போதும் உயிருடன் துடிப்பாக இருக்கிறது. நான் வேலை செய்யாத போது அரிதாகவே கிரிக்கெட்டை பார்ப்பேன். ஆனால் அன்றைய கடைசி நாள் ஆட்டத்தை நானும் பார்த்தேன்”

இதையும் படிங்க: சுந்தர் மாதிரி கார்ப்பரேட் சிஎஸ்கே தான்.. அஸ்வினை இந்த காரணத்தால் கழற்றி விடுறாங்க.. ஸ்ரீகாந்த் வெளிப்படை

“5வது நாளில் 60% இந்தியா வெல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று நான் நினைத்தேன். அவர்களது வெற்றிக்கு முதல் விக்கெட் மட்டுமே அவசியமாக இருந்தது. கிறிஸ் ஓக்ஸ் காயத்தைச் சந்தித்ததால் வெற்றி அவர்கள் பக்கம் இருந்தது. சிராஜ் அதை சாத்தியமாக பெற்றுக் கொடுத்தார்” என்று பாராட்டினார்

- Advertisement -