சுந்தர் மாதிரி கார்ப்பரேட் சிஎஸ்கே தான்.. அஸ்வினை இந்த காரணத்தால் கழற்றி விடுறாங்க.. ஸ்ரீகாந்த் வெளிப்படை

K Sreekanth
- Advertisement -

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் சிஎஸ்கே சமீப காலங்களில் தடுமாறி வருகிறது. கடந்த வருடம் மோசமாக விளையாடிய அந்த அணி புள்ளிப்பட்டியலில் முதல் முறையாக கடைசி இடத்தைப் பிடித்து வெளியேறியது. அதன் காரணமாக அடுத்த வருடம் கம்பேக் கொடுப்பதற்காக ஏற்கனவே சிஎஸ்கே அணி இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கத் துவங்கியது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் சிஎஸ்கே அணியிலிருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் வெளியேற முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 2010, 2011 கோப்பைகளை சிஎஸ்கே வெல்ல முக்கிய பங்காற்றிய அவர் 2015க்குப்பின் பல்வேறு அணிகளுக்காக விளையாடினார். இருப்பினும் கடந்த வருடம் பெரிய தொகைக்கு அஸ்வின் சிஎஸ்கே அணிக்காக மீண்டும் வாங்கப்பட்டது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது.

- Advertisement -

சிஎஸ்கே தான் கழற்றி விடுறாங்க:

ஆனால் அந்த வாய்ப்பில் பெரியளவில் அசத்தாத அஸ்வின் சிஎஸ்கே அணியின் வெற்றிகளில் பங்காற்றவில்லை. அதன் காரணமாக தோனி ஒரு கட்டத்தில் அவரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்கினார். இந்நிலையில் பல கோடி ரூபாய்களை சம்பளமாகக் கொடுக்கும் சிஎஸ்கே அணி தான் வயதானதால் சுமாராக விளையாடும் ரவிச்சந்திரன் அஸ்வினை கழற்றி விட முடிவெடுத்துள்ளதாக முன்னாள் வீரர் கிரிஸ் ஸ்ரீகாந்த் வெளிப்படையாக பேசியுள்ளார்.

இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “முதலில் ஐபிஎல் என்பது தனியார் தொடர், தமிழ்நாடு வாரியத்தால் நடத்தப்படுவது கிடையாது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அஸ்வின் உருவாக்கிய சாதனைகளை நாம் அனைவரும் ரசிக்கிறோம். ஐபிஎல், சிஎஸ்கே, இந்தியா மற்றும் தமிழக அணிக்காக அவர் சிறப்பாக விளையாடியுள்ளார்”

- Advertisement -

ஸ்ரீகாந்த் வெளிப்படை:

“அதற்காக சிஎஸ்கே கோப்பையை வெல்லும் என்று அர்த்தம் கிடையாது. கடந்த சில வருடங்களாக அவர்கள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. எனவே அவர்கள் சிறந்த அணியை உருவாக்க முயற்சிக்கிறார்கள். ஆயுஷ் மாத்ரே, பிரேவிஸ், உர்வில் பட்டேல் ஆகிய இளம் வீரர்கள் கடைசிக்கட்ட போட்டிகளில் அசத்தினார்கள். எனவே பேட்டிங் ஓரளவு வலுவாக மாறியுள்ளதால் சிஎஸ்கே அணி கோப்பையை வெல்ல பவுலிங் துறையை வலுவாக்க முயற்சிக்கிறார்கள்”

இதையும் படிங்க: 359 ரன்ஸ்.. ஜிம்பாப்வேயை ஊதித் தள்ளிய நியூஸிலாந்து.. வரலாற்று வெற்றியுடன் 3வது உலக சாதனை வெற்றி

“ஜாம்பவான் என்ற பெயருக்காக நீங்கள் அவரை வைத்திருக்க முடியுமா? சொல்லப்போனால் அஸ்வின் தற்போது இந்திய அணியில் கூட இல்லை. இந்தியா அவருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தரை தேர்ந்தெடுத்துள்ளார்கள். அஸ்வின் தனது கேரியரின் கடைசி காலத்தில் இருந்தாலும் ஐபிஎல் போன்ற தனியார் தொடர் வித்தியாசமானது. இது கார்ப்பரேட் நடத்தும் தொடராகும். அவர்கள் கோடிக்கணக்கில் உங்களுக்கு பணம் தருகிறார்கள்” என்று கூறினார்.

Advertisement