
பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 22ஆம் தேதி துவங்கியது. 5 போட்டிகள் கொண்ட அந்த தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. ஆனால் சுமாராக பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்ஸில் 150 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அதிகபட்சமாக நித்திஷ் ரெட்டி 41, ரிஷப் பண்ட் 37 ரன்கள் எடுத்த நிலையில் அதிகபட்சமாக ஜோஸ் ஹேசல்வுட் 4 விக்கெட்டுகளை எடுத்தார்கள். பின்னர் விளையாடும் ஆஸ்திரேலியாவை முதல் நாளிலேயே 67-7 என இந்தியா கட்டுப்படுத்தி மிரட்டி வருகிறது. கவாஜா 8, மெக்ஸ்வீனி 10, ஸ்டீவ் ஸ்மித் 0, பட் கமின்ஸை 3 ரன்களில் பும்ரா அபாரமாக பந்து வீசி அவுட்டாக்கினார்.
லபுஸ்ஷேன் 2, மார்ஷ் 6 ரன்களில் சிராஜ் வேகத்தில் அவுட்டான நிலையில் ட்ராவிஸ் ஹெட்டை 11 ரன்களில் ஹர்ஷித் ராணா காலி செய்தார். தற்போதைய நிலையில் 83 ரன்கள் முன்னிலையில் இருக்கும் இந்தியா இந்தப் போட்டியில் போராடி வெல்லும் சூழ்நிலையில் இருக்கிறது. இந்நிலையில் இப்போட்டியில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களின் பலவீனத்தை அறிந்து பந்து வீசிய பும்ரா உலகின் சிறந்த ஆல் ஃபார்மட் பவுலர் என்று பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம் பாராட்டியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “பும்ரா ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை புத்திசாலித்தனமாக படித்து தன்னுடைய ஆட்டத்தில் மேலே இருக்கிறார். சூழ்நிலைகளை உணர்ந்து எதிரணியின் பலவீனத்தை அறிந்து பந்து வீசிய அவருடைய ஸ்பெல் ஒரு மாஸ்டர் கிளாஸ். அவர் அனைத்து வகையான உலகின் சிறந்த பவுலர்”
“வெள்ளைக்கோட்டை பயன்படுத்தி பந்தை கட்டுப்பாட்டுடன் ஸ்விங் செய்து வேகத்துடன் வீசிய அவர் கவாஜா விக்கெட்டை அற்புதமாக எடுத்தார். அந்த வகையில் அவர் பார்ப்பதற்கு அற்புதமான பவுலர். எதிரணியின் பலவீனத்தை வேகமாக உணர்ந்த அவர் அதிகமாக ஷார்ட் பந்துகளை வீசவில்லை. பந்தை பிட்ச் செய்த அவர் பந்தை இருபுறமும் திருப்பி 4 விக்கெட்டுகளை எடுத்தார்”
இதையும் படிங்க: ஒரே நாளில் இத்தனை விக்கெட்டுகளா? 72 ஆண்டுகளுக்கு பின் ஆஸ்திரேலிய மண்ணில் – நிகழ்ந்த சம்பவம்
“அவரைப் போன்றவரை தான் நீங்கள் அணியை முன் நின்று வழி நடத்துபவர் என்று அழைப்பீர்கள்” எனக் கூறினார். இதை அடுத்து இரண்டாவது நாளில் ஆஸ்திரேலியாவை 150 ரன்களுக்குள் சுருட்ட இந்தியா போராட உள்ளது. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி பெரிய இலக்கை நிர்ணயிக்க இந்தியா முயற்சிக்கவுள்ளது.