இந்திய கிரிக்கெட் அணி எல்லை பிரச்சினை காரணமாக 2008க்குப்பின் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செல்வதை முற்றிலுமாக நிறுத்தியுள்ளது. மேலும் 2023 ஆசிய கோப்பை பாகிஸ்தானில் நடைபெற்றது. ஆனால் அந்தத் தொடருக்காக பாகிஸ்தான் சென்று விளையாடாத இந்தியா தங்களுடைய போட்டிகளை இலங்கையில் விளையாடி வெற்றியும் கண்டது. அதே போல இம்முறை 2025 சாம்பியன்ஸ் ட்ராபி வரும் பிப்ரவரி மாதம் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது.
அந்தத் தொடரில் தங்களுடைய போட்டிகளை துபாய் அல்லது இலங்கையில் நடத்துமாறு ஐசிசிக்கு பிசிசிஐ கோரிக்கை வைத்துள்ளதாக தெரிகிறது. ஏனெனில் இப்போதும் பாகிஸ்தானுக்கு சென்று விளையாடுவதை இந்தியா விரும்பவில்லை. ஆனால் இந்தியா வரவில்லையெனில் ஸ்பான்சர்ஷிப் மற்றும் ஒளிபரப்பு நிறுவனங்களிடம் இருந்து போதுமான பணம் பாகிஸ்தானுக்கு கிடைக்காது.
பாகிஸ்தான் திட்டம்:
அதனால் எப்படியாவது தங்கள் நாட்டில் இந்தியாவை விளையாட வைக்க பாகிஸ்தான் வாரியம் முயற்சித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தியா விளையாடும் போட்டிகளை லாகூரில் நடத்த பாகிஸ்தான் வாரியம் திட்டமிட்டுள்ளது. அங்கே நடைபெறும் பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேச அணிகளுக்கு எதிரான 3 லீக் போட்டிகளில் விளையாடிவிட்டு அன்றைய நாளே இந்திய அணியை அருகில் உள்ள டெல்லி அல்லது சண்டிகரில் திருப்பியனுப்பி தங்க வைக்க அந்நாட்டு வாரியம் திட்டமிட்டுள்ளது.
அதன் காரணமாக இந்தியா தங்களுடைய ஊரிலிருந்து பாகிஸ்தானுக்கு சென்று விளையாடி விட்டு மீண்டும் அன்றைய நாளுக்குள் வீட்டுக்கு திரும்ப முடியும். அதனால் பாதுகாப்பு பிரச்சனையும் இருக்காது. இந்த திட்டதுக்கு பிசிசிஐக்கு சம்மதம் தெரிவிக்குமாறு பிசிசிஐக்கு பாகிஸ்தான் வாரியம் கடிதம் எழுதியுள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.
சத்தியம் பண்றேன்:
இந்நிலையில் அது மிகவும் சிறந்த ஐடியா என்று முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். மேலும் தங்கள் நாட்டுக்கு வந்தால் இந்திய வீரர்களுக்கு பாகிஸ்தான் முழு பாதுகாப்பு கொடுக்கும் என்றும் அவர் சத்தியம் செய்துள்ளார். இது பற்றி அவர் பேசியது. “இதுவரை நான் படித்த செய்திகளை வைத்து இந்திய அரசு மற்றும் பிசிசிஐயிடம் இருந்து நேர்மறையான அலைகள் வருவதாக நினைக்கிறேன்”
இதையும் படிங்க: இதை நினச்சு கூட பாக்க முடியல.. ஆர்சிபி அணிக்காக அதை செய்யாம போக மாட்டேன்.. விராட் கோலி பேட்டி
“இந்தியா தங்களுடைய போட்டிகளை லாகூரில் விளையாடும் என்று நான் எங்கேயோ படித்தேன். அவர்கள் லாகூருக்கு வந்து விளையாடி விட்டு அதே நாள் இரவு மீண்டும் வீட்டுக்கு திரும்புவார்கள். அதனால் இந்தியா கட்சிதமாக உணரும் என்பதால் அதற்கு நான் ஆதரவு தருகிறேன். பாகிஸ்தானில் அவர்கள் அற்புதமாக கவனித்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் நான் சத்தியம் செய்கிறேன். விராட் கோலி, ரோஹித் சர்மா, பாண்டியா, சூரியகுமார் ஆகியோரது ரசிகர்கள் பாகிஸ்தானில் உள்ளனர். அந்த இளம் ரசிகர்கள் அவர்களை ரசிப்பார்கள்” என்று கூறினார்.



