ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடர் விரைவில் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. அந்தத் தொடரில் இந்தியா தங்களுடைய போட்டிகளை துபாயில் விளையாட உள்ளது. அதில் விளையாடும் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட அனைத்து அணிகளும் கடந்த மாதமே வெளியிடப்பட்டன. ஆனால் தொடரை நடத்தும் பாகிஸ்தான் மட்டும் தங்களுடைய அணியை வெளியிடுவதில் பெரிய தாமதத்தை செய்து வந்தது.
அந்த நிலையில் ஒரு வழியாக நேற்று பாகிஸ்தான் தங்களுடைய அணியை கடைசி நாடாக அறிவித்தது. நடப்புச் சாம்பியனாக தங்களுடைய சொந்த மண்ணில் விளையாட உள்ள அந்த அணிக்கு முகமது ரிஸ்வான் கேப்டனாக தலைமை தாங்க உள்ளார். இந்நிலையில் அந்த அணியில் 2023க்குப்பின் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத பகீம் அஸ்ரப் தேர்வு செய்யப்பட்டதற்கு விமர்சனங்கள் எழுந்துள்ளன.
சுமாரான தேர்வு:
இது பற்றி ஜாம்பவான் வாசிம் அக்ரம் விமர்சித்தது பின்வருமாறு. “பகீம் அஸ்ரப் இந்த அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் சமீபத்திய மாதங்களில் அவருடைய பேட்டிங் சராசரி வெறும் 8. பவுலிங் சராசரி 100க்கு மேல் இருக்கிறது. இது போக குஸ்தில் ஷா செயல்பாடுகளும் நன்றாக இல்லை. மேலும் நாம் ஒரே ஒரு ஸ்பின்னரை மட்டுமே தேர்ந்தெடுத்துள்ளோம். ஆனால் இந்தியா 4 ஸ்பின்னர்களை தேர்ந்தெடுத்துள்ளது” என்று கூறினார்
இது பற்றி முன்னாள் கேப்டன் ரசித் லதீப் விமர்சித்தது பின்வருமாறு. “பஹீம் இந்த அணியில் தேர்வு செய்யும் அளவுக்கு சமீபத்தில் எந்த நல்ல செயல்பாடுகளும் வெளிப்படுத்த வில்லை. இது அரசியல் அடிப்படையில் செய்யப்பட்ட தேர்வு போல் தெரிகிறது. இதே அணியில் அஷ்ரப், ஃபக்கார் ஜமான், சவுத் சாக்கில் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இவர்கள் மூவருமே கடந்த 3 வருடங்களாக தொடர்ச்சியாக விளையாடவில்லை”
இந்தியாவை பாருங்க:
“இனிமேல் முகமது ரிஸ்வான் தான் சிறந்த பிளேயிங் லெவனை தேர்ந்தெடுக்க வேண்டும். 1992இல் இம்ரான் கான், 2009இல் யூனிஸ் கான் மட்டுமே அதை செய்துள்ளார்கள்” என்று கூறினார். மற்றொரு முன்னாள் வீரர் சோகைல் டன்வீர் இது பற்றி விமர்சித்தது பின்வருமாறு. “நாம் நம்முடைய நாட்டில் நிலவும் சூழ்நிலைகளை மதிக்காமல் நகைச்சுவையான அணியை தேர்ந்தெடுத்துள்ளோம்”
இதையும் படிங்க: தோனி கொடுத்த ஃபேர்வல் சொர்க்கத்தில் எழுதப்பட்டது.. இளம் இந்திய வீரர்களுக்கு விருது வென்ற சச்சின் அட்வைஸ்
“இதே தொடரில் இந்திய அணியை பாருங்கள். அவர்கள் ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், குல்தீப் யாதவ் ஆகிய 4 தரமான ஸ்பின்னர்களை தேர்ந்தெடுத்துள்ளார்கள். ஆனால் நாம் அப்ரார் அஹ்மதை மட்டுமே ஒற்றை ஸ்பின்னராக தேர்ந்தெடுத்துள்ளோம். இது யாரோ பேப்பரில் எழுதிக் கொடுத்து பரிந்துரை செய்யப்பட்ட அணியை போல் இருக்கிறது” எனக் கூறினார்.



