ஐபிஎல்-லில் கற்ற வித்தையை இங்கிலாந்து தொடரில் காட்டுவேன் ..! – சவால் விட்ட தமிழக வீரர்..! யார் தெரியுமா..?

karthik
- Advertisement -

இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பல்வேறு இளம் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடினர். அதிலும் குறிப்பாக ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர், விஜய் ஷங்கர் அகியோர்களை தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தினார். இந்த தொடரில் பெங்களூர் அணியில் விளையாடிய வாஷிங்டன் சுந்தர் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஐபிஎல் போட்டி மூலம் பெற்ற அனுபவத்தை பயன்படுத்தி சிறப்பாக விளையாடுவேன் என்று கூறியுள்ளார்.
washington

இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியில் விளையாடி வந்த வாஷிங்டன் சுந்தர் அடுத்த மாதம் இங்கிலாந்துடனான தொடரில் பங்கேற்க உள்ளார். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் 7 போட்டிகளில் விளையாடி 4 விக்கெட்டுகளை மட்டுமே பெற்றிருந்தார். இருப்பினும் அடுத்த மாதம் இங்கிலாந்து நாட்டிற்கு சுற்று பயணம் செய்யும் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார். இதில் முதலில் டி20 போட்டிகலிலும், அதனை தொடர்ந்து ஓரு நாள் போட்டிகளிலும் விளையாட உள்ளார்.

சமீபத்தில் இது குறித்து பேசிய வாஷிங்டன் சுந்தர் “ஐ.பி.எல் தொடரின் மூலம் பெற்ற அனுபவம் மிகவும் சிறப்பானதாக இருந்தது. உண்மையாக சொல்ல வேண்டம் என்றால் , விளையாடும் லெவனில் இடம் பிடிப்பது தேர்வு குழுவை சார்ந்தது. ஆடும் லெவன் அணியில் இடம்பிடிக்கும்போது நான்கு வெளிநாட்டு வீரர்கள் மற்றும் அணி காம்பினேசன் மூலம் ஏராளமான விஷயங்கள் தொடர்புப்படுத்திக் கொள்ள முடியும். ஒட்டுமொத்தமாக ஏமாற்றம் ஏதும் இல்லை.

நீங்கள் எப்படி விளையாடுகிறீர்கள் என்பது முக்கியம் இல்லை .நீங்கள் என்ன கற்றுக் கொண்டீர்கள் என்பது தான் முக்கியம். நான் இதற்கு முன் இங்கிலாந்து சென்று விளையாடியது கிடையாது. இதுபோன்ற கண்டிப்பான சவால்கள் சிறந்த பந்து வீச்சை வெளிக்கொண்டு வரும். நான் பெரிய அளவில் மாற்றத்தை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. ஐபிஎல் அனுபவத்தின் மூலம் என்னால் சிறப்பாக பந்து வீச முடியும் என்று நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -
Advertisement