- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இதுதான் லாஸ்ட் சேன்ஸ்.. சிக்கலானா டி20 உலககோப்பை வாய்ப்பு பறிபோகும் – வாஷிங்டன் சுந்தரின் பரிதாப நிலை

தமிழகத்தை சேர்ந்த நட்சத்திர சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் நியூசிலாந்து அணிக்கு எதிராக கடந்த ஜனவரி 11-ஆம் தேதி நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது விளையாடியிருந்தார். ஆனால் அந்த போட்டியின் இடையே ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்ட அவர் அந்த போட்டி முடிந்த கையோடு எஞ்சியிருந்த இரண்டு ஒருநாள் போட்டிகளில் இருந்தும் வெளியேறியிருந்தார்.

வாஷிங்டன் சுந்தருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் :

அதோடு அதற்கடுத்து தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இருந்தும் முற்றிலுமாக விலகினார். அதனைத் தொடர்ந்து தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று தனது காயத்திற்கான சிகிச்சை மேற்கொண்டு வரும் அவர் தற்போது பயிற்சியையும் மேற்கொண்டு வருகிறார்.

- Advertisement -

ஆனால் அவர் எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இணைந்து விளையாடுவாரா? என்பது தற்போது சந்தேகமாகியுள்ளது. ஏனெனில் 2026 டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருக்கும் அவர் வருகிற பிப்ரவரி 7-ஆம் தேதி உலக கோப்பை தொடரானது துவங்கவுள்ள வேளையில் பிப்ரவரி 4-ஆம் தேதிக்குள் தனது உடற்தகுதியை நிரூபிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக வாஷிங்டன் சுந்தருக்கு வருகிற பிப்ரவரி 4-ஆம் தேதி உடற்பகுதி சோதனை நடைபெற இருக்கிறது. அந்த சோதனைக்கு பின்னர் மருத்துவக்குழுவின் அறிக்கையை பொறுத்து அவர் டி20 உலககோப்பை தொடரில் விளையாடுவாரா? மாட்டாரா? என்பது தெரியவரும்.

- Advertisement -

இதையும் படிங்க : தெ.ஆ அணிக்கு அடுத்து இரண்டாவது அணியாக இந்திய அணியை வீழ்த்தி அசத்தல் சாதனையை நிகழ்த்திய – நியூசிலாந்து அணி

ஒருவேளை அவர் முழு உடற்தகுதியை எட்டவில்லை எனில் வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக வேறொரு வீரரை டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் பிசிசிஐ சேர்க்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி ஒருவேளை வாஷிங்டன் சுந்தர் உலககோப்பை அணியில் இடம்பெறவில்லை எனில் அவருக்கு பதிலாக சபாஷ் அகமது அணியில் இடம்பெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

- Advertisement -