ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஹோபர்ட் நகரில் நடைபெற்ற மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியின் போது 187 ரன்கள் என்கிற இலக்கினை இந்திய அணி துரத்துகையில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வாஷிங்டன் சுந்தர் 23 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் என 49 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அவரது இந்த சிறப்பான ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது.
என்னுடைய வாய்ப்புகளை நான் பயன்படுத்த விரும்புகிறேன் : வாஷிங்டன் சுந்தர்
ஏற்கனவே இந்த டி20 தொடரின் இரண்டு போட்டிகளின் முடிவில் ஒரு தோல்வியுடன் பின்னடைவை சந்தித்திருந்த இந்திய அணியானது இந்த வெற்றியின் மூலம் தற்போது இந்த தொடரை ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. இந்த போட்டியில் பந்துவீச்சில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் பேட்டிங்கில் தனக்கு கிடைத்த வாய்ப்பை வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக பயன்படுத்தியது பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்த மூன்றாவது போட்டியில் தான் சிறப்பாக விளையாடியதற்கான காரணம் குறித்து பேசியிருந்த தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் சில கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் அவர் கூறியதாவது : எனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை மிகச் சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்று மட்டுமே நினைத்து விளையாடுகிறேன். அந்த வகையில் இந்த போட்டியின் போது நான் முடிவுகளை நோக்கி விளையாடவில்லை.
எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பில் சூழ்நிலைக்கு தகுந்தவாறு அணிக்கு என்ன தேவையோ அதை மட்டுமே பூர்த்தி செய்யும் வகையில் என்னுடைய பலத்தை வெளிப்படுத்தி விளையாடினேன். என்னுடைய மனதில் தற்போது தெளிவான திட்டங்கள் உள்ளது. அதாவது என்னுடைய ஆட்டத்தை நான் அனுபவித்து மகிழ்ச்சியுடன் விளையாட விரும்புகிறேன். அந்த வகையில் தான் இந்த போட்டியிலும் பேட்டிங் செய்ய களமிறங்கிய போது மிகுந்த மகிழ்ச்சியுடன் ஆட்டத்தை ரசித்து விளையாடினேன்.
இந்த போட்டியின் போது அணிக்கு என்ன தேவை என்பதை கருத்தில் கொண்டு பேட்டிங் செய்ய தயாராக இருந்தேன். அந்த வகையில் நான் பேட்டிங் செய்ய களத்திற்கு வந்ததும் பந்துகளை மிகவும் கூர்மையாக பார்த்து அதற்கு ஏற்றார் போன்று விளையாட வேண்டும் என்று நினைத்தேன். அதன்படி முதல் பந்தில் இருந்தே பந்துகளுக்கு ஏற்ப என்னுடைய பேட்டிங்கை வெளிப்படுத்தினேன். சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடுவது என்பது மிகப்பெரிய கௌரவம்.
இதையும் படிங்க : சி.எஸ்.கே அணிக்கு வாஷிங்டன் சுந்தர் வர வாய்ப்பு இருக்கா? டிரேடிங் நடக்குமா? – விவரம் இதோ
தற்போது எனக்கு எப்படி ஒரு வாய்ப்பு அணியில் கிடைத்தாலும் அதனை கையில் எடுத்து சிறப்பாக செயல்பட தயாராக இருக்கிறேன். அது பேட்டிங், பவுலிங் என்றெல்லாம் கிடையாது. எந்த வகையில் எனக்கு வாய்ப்பு கிடைத்தாலும் அந்த வாய்ப்பை பயன்படுத்த வேண்டும் என்பது மட்டுமே எனது நோக்கமாக இருக்கிறது என வாஷிங்டன் சுந்தர் கூறியது குறிப்பிடத்தக்கது.



