சுப்மன் கில் தலைமையிலான இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியானது கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடியிருந்தது. அந்த தொடரில் அனுபவ வீரர்கள் இன்றி விளையாடிய இந்திய அணி எவ்வாறு செயல்படப்போகிறது என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அந்த தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் இந்திய அணி சமன் செய்தது பலரது மத்தியிலும் பாராட்டுக்களை பெற்றிருந்தது.
எனது பேட்டிங்கில் முன்னேற்றம் வர இவரே காரணம் : வாஷிங்டன் சுந்தர்
ஏனெனில் புதிய கேப்டன் தலைமையில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியின் இந்த செயல்பாடு வியக்க வைக்கும் அளவிற்கு இருந்தது. அதிலும் குறிப்பாக இந்த டெஸ்ட் தொடரில் தமிழக சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தரும் தனது சிறப்பான பேட்டிங்கின் மூலம் அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்திருந்தார்.
அவரது பேட்டிங் முன்பை விட இந்த தொடரில் பிரமாதமாகவே இருந்தது என்று கூறலாம். ஏனெனில் மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியின் போது ரவீந்திர ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்து விளையாடிய வாஷிங்டன் சுந்தர் இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் 206 பந்துகளில் 101 ரன்கள் குவித்து தனது முதல் டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்ததோடு சேர்த்து இந்திய அணியை டிராவை நோக்கியும் அழைத்துச் சென்றார்.
அவரது இந்த அற்புதமான சதம் பலரது மத்தியிலும் பாராட்டினை பெற்றிருந்தது. இந்நிலையில் நடைபெற்று இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பேட்டிங்கில் தான் அசத்த என்ன காரணம்? என்பது குறித்த தகவலை தற்போது பிரத்தியேக பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட வாஷிங்டன் சுந்தர் முன்னாள் இந்திய வீரரான சீக்காவுடன் பகிர்ந்து கொண்டார். அப்படி வாஷிங்டன் சுந்தர் கூறியதாவது :
நான் இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் தொடரின் போது குஜராத் பயிற்சியாளரான ஆஷிஷ் நெஹ்ராவுடன் சேர்ந்து அதிக நேரம் பேட்டிங்கில் செலவு செய்தேன். ஒட்டுமொத்தமாக என்னுடைய கரியரில் இந்த அளவிற்கு நான் பேட்டிங் பயிற்சியை மேற்கொள்ள மேற்கொண்டதில்லை. அந்த அளவிற்கு அவர் எனது பேட்டிங்கின் மீது அதிக கவனம் செலுத்தி பயிற்சியை வழங்கினார்.
இதையும் படிங்க : பும்ரா மற்றும் ரவி பிஷ்னாய் ஆகியோருக்கு அடுத்து 3 ஆவது இந்திய வீரராக வருண் சக்ரவர்த்தி – நிகழ்த்திய சாதனை
அதோடு என்னுடைய பவர் ஹிட்டிலும் நிறைய வேலைகளை, ஸ்கில்களை சேர்க்க ஆஷிஷ் நெஹ்ரா தான் உதவியிருந்தார் என வாஷிங்டன் சுந்தர் தெரிவித்தார். அவர் கூறியது போன்று ஐபிஎல் தொடரில் முன்பெல்லாம் பின்வரிசையில் ஆறாவது, ஏழாவது வீரராக களமிறங்கும் அவர் நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் தொடரின் போது குஜராத் அணிக்காக டாப் ஆர்டரில் இறங்கி சில அற்புதமான இன்னிங்ஸ்களையும் விளையாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.



