இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்வியின் விளிம்பில் உள்ளது. ஏனெனில் இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 489 ரன்களை குவித்த வேளையில் அடுத்ததாக விளையாடிய இந்திய அணி 201 ரன்கள் மட்டுமே குவித்தது.
டீமுக்காக எதையும் செய்ய நான் தயார் : வாஷிங்டன் சுந்தர்
இதன் காரணமாக 288 ரன்கள் முன்னிலையுடன் தற்போது தென்னாப்பிரிக்கா அணியானது தங்களது இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது. இந்த தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடர் ஆரம்பித்தபோது முதல் டெஸ்ட் போட்டியில் மூன்றாவது வீரராக களமிறக்கப்பட்ட வாஷிங்டன் சுந்தர் மீண்டும் இரண்டாவது போட்டியின் போது எட்டாவது இடத்தில் களமிறக்கப்பட்டார்.
முதல் டெஸ்ட் போட்டியில் 3 ஆம் இடத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பை அற்புதமாக பயன்படுத்திய வாஷிங்டன் சுந்தர் அசத்தலாக விளையாடிய போதும் இரண்டாவது போட்டியில் சாய் சுதர்சனின் வருகையால் அவரது பேட்டிங் ஆர்டர் மாறியது. ஏற்கனவே டெஸ்ட் அணியை பொருத்தவரை அடிக்கடி பேட்டிங் ஆர்டரில் மாற்றம் செய்யப்பட்டு தேவையான போது வாஷிங்டன் சுந்தர் களமிறங்கி வருகிறார்.
இந்நிலையில் இப்படி அடிக்கடி பேட்டிங் வரிசை மாற்றப்படுவது குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ள வாஷிங்டன் சுந்தர் சில வெளிப்படையான கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : இந்திய அணியின் நிர்வாகம் எங்கு என்னை பேட்டிங் செய்ய விரும்புகிறதோ அந்த இடத்தில் நான் பேட்டிங் செய்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஏனெனில் அணிக்கு என்ன தேவையோ அதனை செய்ய நான் தயாராக இருக்கிறேன். இது ஒரு டீம் கேம். உண்மையை சொல்லப்போனால் என்னை எங்கு பந்து வீச அழைக்கிறார்களோ? எங்கு பேட்டிங் செய்ய அழைக்கிறார்களோ? அந்த இடத்தில் நான் களமிறங்க தயாராக இருக்கிறேன். ஒரு கிரிக்கெட் வீரராக அதுதான் முக்கியம்.
இதையும் படிங்க : இந்திய அணியின் வீழ்ச்சிக்கு கம்பீரும் ஒரு காரணம்.. இந்தியா அவரை மிஸ் பண்ணுது.. கும்ப்ளே அதிருப்தி
எனவே அனைத்திற்கும் நான் ரெடி. இந்திய அணிக்காக என்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். இதுமட்டும் தான் என்னுடைய மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது. எந்தவித சூழலாக இருந்தாலும் என்னால் முடிந்த பங்களிப்பை வழங்குவதற்காக கடினமாக உழைக்கிறேன் என வாஷிங்டன் சுந்தர் கூறியது குறிப்பிடத்தக்கது.



