இந்திய அணியின் வீழ்ச்சிக்கு கம்பீரும் ஒரு காரணம்.. இந்தியா அவரை மிஸ் பண்ணுது.. கும்ப்ளே அதிருப்தி

Anil Kumble
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கௌகாத்தியில் நடைபெறும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோல்வியின் பிடியில் சிக்கியுள்ளது. ஏற்கனவே கொல்கத்தாவில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 15 வருடங்கள் கழித்து தெனாப்பிரிக்காவிடம் சொந்த மண்ணில் தோல்வியைச் சந்தித்தது. அதனால் தொடரை சமன் செய்ய நவம்பர் 22ஆம் தேதி துவங்கிய 2வது போட்டியில் இந்தியா நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது.

அந்த சூழ்நிலையில் டாஸ் வென்ற தெனாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்து 489 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய இந்தியா மோசமாக பேட்டிங் 201 ரன்களை மட்டுமே எடுத்தது. அதைத் தொடர்ந்து விளையாடும் தென்னாப்பிரிக்கா 3வது நாளின் முடிவில் 314 ரன்களை முன்னிலையாகப் பெற்றுள்ளதால் இப்போட்டியிலும் இந்தியா வெற்றி பெறுவது கடினமாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

கில்லை மிஸ் செய்யும் இந்தியா:

இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணி சுப்மன் கில்லை ஒரு பேட்ஸ்மேனாக மிஸ் செய்வதாக முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். அத்துடன் சோதனை என்ற பெயரில் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் செய்த தடாலடியான மாற்றங்களும் இந்திய அணியின் இந்த வீழ்ச்சிக்கு காரணம் என்று அவர் பெயரைக் குறிப்பிடாமல் விமர்சனம் செய்துள்ளார். இது பற்றி கும்ப்ளே பேசியது பின்வருமாறு.

“இப்போட்டியில் கடந்த 3 – 4 வருடங்களில் விளையாடிய டாப் 5 பேட்ஸ்மேன்கள் ஒன்று ஓய்வு பெற்று விட்டார்கள் அல்லது தேர்ந்தெடுக்கப்படவில்லை. அதாவது விராட் கோலி, ரோஹித் சர்மா, புஜாரா ஆகியோர் ஓய்வு பெற்று விட்டனர். ரஹானே தேர்ந்தெடுக்கப்படவில்லை. எனவே தொடர்ச்சியாக நீண்ட வருடங்கள் விளையாடி வந்த டாப் 5 பேரில் நால்வர் இல்லை. காயத்தால் விளையாடாத சுப்மன் கில்லை இந்திய அணி கேப்டனாக மட்டுமின்றி பேட்ஸ்மேனாகவும் மிஸ் செய்கிறது”

- Advertisement -

கம்பீரின் மாற்றங்கள்:

“இந்த விஷயமும் தற்போதைய இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் செட்டிலாகாத நிலையை உண்டாக்கியுள்ளது. எனவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பேட்ஸ்மேன்களுக்கு அணி நிர்வாகம் தொடர்ந்து வாய்ப்பளிக்க வேண்டும். பொதுவாக உங்களுக்கு சில நாட்கள் மோசமாக அமைவது வழக்கமாகும். அப்போதெல்லாம் உங்களுடைய வீரர்களுக்கு நீங்கள் 6, 7, 8 போட்டிகளில் ஆதரவு கொடுப்பது முக்கியம்”

இதையும் படிங்க: 2026 ஐ.பி.எல் கோப்பையை வென்றால் அவருக்கு டெடிகேட் பண்ணுவோம் – ரவீந்திர ஜடேஜா பேட்டி

“ஆனால் கடந்த 10 – 12 போட்டிகளைப் பார்க்கும் போது நமது பேட்டிங் வரிசை மேலும் கீழமாக மாற்றப்படுகிறது. அதில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அது நம்முடைய வீரர்களை செட்டிலாக விடவில்லை என்று நான் உறுதியாக சொல்வேன். நீங்கள் இன்னும் நல்ல முயற்சியை எதிர்பார்த்தீர்கள். எப்படியிருந்தாலும் பேட்டிங் வரிசையை அடிக்கடி கலக்குவது நம்முடைய பேட்ஸ்மேன்களை கொஞ்சம் தொந்தரவு செய்திருக்கும்” என்று கூறினார்.

Advertisement