வீடியோ : சூப்பர்மேனாக சூப்பர் கேட்ச் பிடித்த வாஷிங்டன் சுந்தர், ட்ரிக்கான பிட்ச்சில் கடின இலக்கை துரத்துமா இந்தியா?

Washington Sundar
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரை 3 – 0 (3) என்ற கணக்கில் கைப்பற்றிய இந்தியா தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக முன்னேறி அக்டோபர் மாதம் நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பைக்கு தயாராகும் பயணத்தில் வெற்றி நடை போடுகிறது. அதைத்தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிராக நடைபெறும் 3 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஜனவரி 27ஆம் தேதியன்று தொடங்கியது. கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் ஓய்வெடுக்கும் இத்தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம் அணி 2024 டி20 உலக கோப்பைக்கு தேவையான வீரர்களை கண்டறிந்து தயாராகும் வகையில் விளையாடுகிறது.

அந்த நிலையில் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் இரவு 7 மணிக்கு துவங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய நியூஸிலாந்துக்கு பவர் பிளே ஓவர்களில் அதிரடியான பவுண்டரிகளை பறக்க விட்டு 43 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்துக் கொடுத்த பின் ஆலன் 4 பவுண்டரி 2 சிக்சருடன் அதிரடியாக 35 (23) ரன்கள் எடுத்து மிரட்டலை கொடுத்தார். ஆனால் 5வது ஓவரில் முதல் பந்திலேயே சிக்ஸர் பறக்க விட்ட அவரை வாஷிங்டன் சுந்தர் அவுட்டாக்கினார். அந்த நிலைமையில் களமிறங்கிய மார்க் சாப்மேன் அதே ஓவரின் கடைசிப் பந்தில் தடுப்பாட்டத்தை ஆட முயற்சித்தும் வாஷிங்டன் சுந்தர் சுழல் வேகத்தில் கேட்ச் கொடுத்தார்.

- Advertisement -

சூப்பர் கேட்ச்:
கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு சில வினாடிகளில் தமது பக்கபாட்டு பகுதியில் வந்த அந்த கேட்ச்சை பிடிக்க ஓடி சென்ற வாஷிங்டன் சுந்தர் சரியான நேரத்தில் தாவி சூப்பர் மேன் போல கச்சிதமாக பிடித்தார். அதனால் மார்க் சேப்மன் டக் அவுட்டாகி சென்றதால் 43/2 என நியூசிலாந்து தடுமாறிய போது களமிறங்கிய கிளன் பிலிப்ஸ் மறுபுறம் நங்கூரமாக நின்று அதிரடி காட்டிக் கொண்டிருந்த டேவோன் கான்வேயுடன் இணைந்து தனது பங்கிற்கு கம்பெனி கொடுக்கும் வகையில் பேட்டிங் செய்தார்.

3வது விக்கெட்டுக்கு 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சர்வை சரி செய்த இந்த ஜோடியில் கிளன் பிலிப்ஸ் தடுமாறி 17 (22) ரன்களில் குல்தீப் யாதவ் சுழலில் ஆட்டமிழந்தார். ஆனாலும் மறுபுறம் நிலைத்து நின்று அதிரடி காட்டிய டேவோன் கான்வே அரை சதமடித்து 7 பவுண்டரி 1 சிக்சருடன் 52 (35) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அந்த சமயத்தில் வந்த டார்ல் மிட்சேல் அதிரடி காட்டினாலும் அடுத்து வந்த மைக்கேல் பிரேஸ்வெல் அதிரடி காட்டுவதற்கு முன் 1 ரன்னில் ரன் அவுட்டாகி சென்றார்.

- Advertisement -

அப்போது வந்த மிட்சேல் சாட்னர் 7 (5) ரன்னில் அவுட்டானாலும் மறுபுறம் டெத் ஓவர்களில் இந்திய பவுலர்களை தெறிக்க விட்ட டார்ல் மிட்சேல் 3 பவுண்டரி 5 சிக்ஸருடன் 59* (30) ரன்களை விளாசினர். குறிப்பாக மீண்டும் நோ-பாலுடன் அரஷ்தீப் போட்ட கடைசி ஓவரில் 6, 6, 6, 4, 0, 2, 2 என அதிரடி காட்டிய அவர் 20 ஓவரில் நியூஸிலாந்து 176/6 ரன்கள் எடுத்து இந்தியாவுக்கு சவாலான இலக்கை நிர்ணயிக்க முக்கிய பங்காற்றினார். இந்தியா சார்பில் அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

இதையும் படிங்க: சர்பராஸ் கானுக்கு பதில் சூர்யகுமார் தேர்வு செய்யப்பட்டது ஏன்? அனைவரது கேள்விக்கு தேர்வுக்குழு உறுப்பினர் சரத் நேரடி பதில்

இந்த போட்டியில் கேப்டன் பாண்டியா, உம்ரான் மாலிக், சிவம் மாவி போன்ற அனைத்து வேகப்பந்து வீச்சாளர்களையும் அதிரடியாக எதிர்கொண்ட நியூசிலாந்து வீரர்களை வாஷிங்டன் சுந்தர் போன்ற ஸ்பின்னர்கள் தான் கட்டுக்கோப்பாக செயல்பட்டு கட்டுப்படுத்தினார்கள். அந்த வகையில் சுழல் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் ராஞ்சி மைதானத்தில் அடுத்ததாக பேட்டிங் செய்யும் இந்தியா 177 ரன்களை துரத்தி வெற்றி பெறுவதற்கு மிகவும் கவனத்துடன் விளையாட வேண்டியது அவசியமாகிறது.

Advertisement