சர்பராஸ் கானுக்கு பதில் சூர்யகுமார் தேர்வு செய்யப்பட்டது ஏன்? அனைவரது கேள்விக்கு தேர்வுக்குழு உறுப்பினர் சரத் நேரடி பதில்

Suryakumar yadav sarfaraz khan
- Advertisement -

வரும் ஜூலை மாதம் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெறுவதற்காக வரும் பிப்ரவரியில் சொந்த மண்ணில் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா களமிறங்குகிறது. அதற்காக ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் இளம் வீரர் சர்பராஸ் தான் புறக்கணிக்கப்பட்டதும் சூரியகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டதும் பல விவாதங்களையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக காலம் காலமாக இந்திய டெஸ்ட் அணிக்கு இந்திய உள்ளூர் டெஸ்ட் தொடரான ரஞ்சிக் கோப்பையில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு தான் முன்னுரிமை கொடுத்து தேர்வு செய்ய வேண்டும்.

அந்த அடிப்படையில் கடந்த 3 வருடங்களாக பெரிய ரன்களை குவித்து வரும் சர்பராஸ் கான் உலகிலேயே உள்ளூர் முதல் தர கிரிக்கெட்டில் ஜாம்பவான் டான் பிராட்மேனுக்கு பின் அதிக பேட்டிங் சராசரியை (80) கொண்ட வீரராக வெளுத்து வாங்கி தேர்வுக்குழு கதவை தொடர்ந்து தட்டி வருகிறார். அதனாலேயே கடந்த வருடம் ரஞ்சிக்கோப்பை பைனலில் சதமடித்த தம்மிடம் கடந்த டிசம்பரில் வங்கதேச மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் தேர்வு செய்யப்படுவீர்கள் என்று சேட்டன் சர்மா வாக்குறுதி கொடுத்ததாக சர்பராஸ் கான் சமீபத்தில் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

காரணம் என்ன:
ஆனால் அடுத்ததாக நடைபெறும் ஆஸ்திரேலியா தொடரில் கூட தம்மை தேர்வு செய்யாமல் தேர்வு குழுவினர் ஏமாற்றி விட்டதாகவும் அவர் வேதனை வெளிப்படுத்தினார். மறுபுறம் டி20 கிரிக்கெட்டில் உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்தி உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறி அற்புதமான பார்மில் இருக்கிறார் என்பதற்காக உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 45க்கும் குறைவான பேட்டிங் சராசரியை வைத்துள்ள சர்பராஸ் கான் தேர்வு செய்யப்பட்டது ரஞ்சிக் கோப்பைக்கு நிகழ்த்தப்பட்ட அவமானம் என்று நிறைய முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் கொந்தளித்தனர்.

இந்நிலையில் அணியின் சமநிலை தன்மை மற்றும் நலனை கருதி தான் சர்பராஸ் கான் தேர்வு செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ள சேட்டன் சர்மா தலைமையிலான ஐவர் தேர்வுக்குழுவில் இடம் வகிக்கும் உறுப்பினர் ஸ்ரீதரன் சரத் விரைவில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கூறியுள்ளார். அதே போல் ரிஷப் பண்ட் காயமடைந்து வெளியேறியுள்ள நிலையில் அவரது இடத்தில் அதிரடியாக விளையாடி போட்டியை மாற்றக்கூடிய ஒருவர் தேவை என்பதாலேயே சூரியக்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீதரன் சரத் தெளிவுபடுத்தியுள்ளார்.

- Advertisement -

அதே சமயம் சூரியகுமார் யாதவ் உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 5000 ரன்களை அடித்துள்ளதையும் மறந்து விட வேண்டாம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “சர்பராஸ் கான் எங்களது திட்டத்தில் இருக்கிறார். அவர் அடுத்ததாக வாய்ப்பு பெறும் வீரர்களில் இருக்கிறார். அவருக்கான வாய்ப்பு விரைவில் கிடைக்கும். ஆனால் இந்திய அணியை தேர்வு செய்யும் போது நாங்கள் முதலில் கலவை மற்றும் சமநிலை ஆகியவற்றுக்கு தான் முதலில் முன்னுரிமை கொடுக்க வேண்டும்” என்று கூறினார்.

அவர் கூறுவது போல 3, 4, 5, 6 ஆகிய இடங்களில் புஜாரா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் விக்கெட் கீப்பர் ஆகியோர் ஏற்கனவே விளையாடுவதற்கு தயாராக இருக்கிறார்கள். அப்படிப்பட்ட நிலையில் சர்ப்ராஸ் கானுக்கு தேர்வு செய்தாலும் வாய்ப்பு கிடைக்காது என்பதாலேயே இப்போதைக்கு தேர்வு செய்யவில்லை என்று ஸ்ரீதரன் சரத் கூறியுள்ளார். அத்துடன் சூரியகுமார் யாதவ் பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “சூரியகுமார் யாதவ் விரைவாக ரன்களை அடித்து எதிரணியிடமிருந்து போட்டியை இந்தியாவின் பக்கம் கொண்டு வரக்கூடியவர். அவர் வித்தியாசமான ஷாட்டுகளை அடித்து எதிரணியை செட்டிலாக விடாமல் செய்வார். அதே சமயம் அவர் முதல் தர கிரிக்கெட்டில் 5000 ரன்களை எடுத்துள்ளதை மறக்க வேண்டாம்” என்று கூறினார்.

இதையும் படிங்க: IND vs NZ : இன்றைய முதலாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ

முன்னதாக உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட காரணத்தால் கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் சூரியகுமார் முதல் முறையாக தேர்வானார். ஆனால் அப்போது விளையாடும் அணியில் வாய்ப்பு பெறாத அவர் அதன் தொடர்ச்சியாகவே இப்போதும் தேர்வு செய்யப்பட்டுள்ளாரே தவிர சர்பராஸ் கான் இடத்தைப் பிடிக்கவில்லை என்பது நிதர்சனமாகும்.

Advertisement