சொன்ன வாக்கை காப்பற்றியதோடு சேர்த்து இந்திய அணியையும் மீட்டெடுத்த வாஷிங்டன் சுந்தர் – விவரம் இதோ

Sundar-and-Reddy
- Advertisement -

மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது நாளான இன்று இந்திய அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது அனைவரது மத்தியிலும் பாராட்டுக்களை பெற்றுள்ளது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 474 ரன்கள் குவித்திருந்த வேளையில் இந்திய அணி தற்போது தங்களது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது.

இந்திய அணியை மீட்டெடுத்த வாஷிங்க்டன் சுந்தர் :

போட்டியின் நேற்றைய இரண்டாம் நாள் அன்று இந்திய அணி ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்திருந்த வேளையில் இன்று மூன்றாம் நாள் ஆட்டம் முடிவடைந்த போது இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 358 ரன்கள் குவித்துள்ளது.

- Advertisement -

இதன் காரணமாக நாளைய நான்காம் நாள் ஆட்டத்தில் 116 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் இந்திய அணி தங்களது முதல் இன்னிங்சை தொடர காத்திருக்கிறது. இந்நிலையில் நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவின்போது பேசியிருந்த இந்திய அணியின் இளம் சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் :

இன்னும் மூன்று நாட்கள் ஆட்டம் எஞ்சியுள்ளதால் நிச்சயம் என்னால் முடிந்த மிகச் சிறப்பான பங்களிப்பை பேட்டிங்கில் வழங்குவேன் என்று நம்பிக்கை அளித்திருந்தார். அவர் கூறியது போன்றே இன்று ஒன்பதாவது வீரராக களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி :

- Advertisement -

172 பந்துகளை சந்தித்து 1 பவுண்டரியுடன் 50 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். ஒரு கட்டத்தில் இந்திய அணி 221 ரன்களுக்கு ஏழாவது விக்கெட் இழந்த போது எட்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் மற்றும் நிதீஷ் ரெட்டி ஆகியோரது ஜோடி 127 ரன்கள் குவித்து இந்திய அணியை பாலோ ஆனிலிருந்து மீட்டதோடு சேர்த்து நல்ல நிலைக்கு கொண்டு வந்துள்ளது.

இதையும் படிங்க : சதமடித்த பின்னர் ஓய்வறைக்கு திரும்பிய நிதீஷ் குமார் ரெட்டிக்கு இந்திய வீரர்கள் கொடுத்த மரியாதை – விவரம் இதோ

இப்படி போட்டியின் இரண்டாம் நாளில் அதிரடியான கருத்தை வெளியிட்டிருந்த வாஷிங்டன் சுந்தர் தான் கூறிய வார்த்தையை பேட்டிங்கில் அரைசதம் அடித்து காப்பாற்றியுள்ளது அனைவரது மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

Advertisement