இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டியானது மெல்போர்ன் நகரில் கடந்த டிசம்பர் 26-ஆம் தேதி துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி முடித்தது.
நிதீஷ் ரெட்டிக்கு இந்திய வீரர்கள் கொடுத்த மரியாதை :
அந்த வகையில் ஆஸ்திரேலியா அணி தங்களது முதல் இன்னிங்சில் 474 ரன்கள் என்கிற நல்ல ரன் குவிப்பை வழங்கியது. அதனை தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வரும் இந்திய அணியானது மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவு 9 விக்கெட்டுகளை இழந்து 358 ரன்கள் எடுத்துள்ளது.
இதன் காரணமாக 116 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் நான்காம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி விளையாட இருக்கிறது. போட்டியின் மூன்றாம் நாளான இன்று ஆட்டநேர முடிவில் நிதீஷ் குமார் ரெட்டி 176 பந்துகளை சந்தித்து 10 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 105 ரன்களயும், சிராஜ் 2 ரன்களுடனும் அடித்து களத்தில் உள்ளனர்.
இந்நிலையில் இந்த போட்டியில் தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்த நிதீஷ் ரெட்டி இந்திய அணியை ஃபாலோ ஆனிலிருந்து காப்பாற்றியதோடு சேர்த்து கிட்டத்தட்ட ஆஸ்திரேலிய அணிக்கு நெருக்கமாக இந்திய அணி கொண்டு வந்துள்ளார். அவரது இந்த மிகச்சிறப்பான இன்னிங்ஸ் பலரது மட்டும் பாராட்டுகளை பெற்றுள்ளது.
இவ்வேளையில் இன்றைய மூன்றாம் நாள் ஆட்டநேரம் முடிந்ததும் இந்திய அணியின் வீரர்கள் ஓய்வறைக்கு திரும்பிய நிதீஷ் ரெட்டிக்கு சிறப்பான மரியாதையை அளித்து வரவேற்றது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது. அந்த வகையில் போட்டியின் மூன்றாம் நாளான இன்று போதிய வெளிச்சம் இன்மை காரணமாக ஆட்டம் முன்கூட்டியே நிறுத்தப்பட்டதால் மைதானத்தில் இருந்து ஓய்வறைக்கு நிதீஷ் ரெட்டி மற்றும் சிராஜ் ஆகியோர் திரும்பினர்.
இதையும் படிங்க : ஆஸ்திரேலிய மண்ணில் 8 ஆவது வீரராக களமிறங்கி மாபெரும் சாதனையை நிகழ்த்திய – நிதீஷ் ரெட்டி
அப்போது கேப்டன் ரோகித் சர்மா, பயிற்சியாளர் கௌதம் கம்பீர் உட்பட அனைத்து நிர்வாக குழுவும் சரி, இந்திய அணியின் வீரர்களும் சரி எழுந்து நின்று கைதட்டி ஆரவாரமாக அவரை வரவேற்று முதல் நபராக அவரை ஓய்வறைக்கு அனுப்பி அதன் பின்னர் அனைவரும் ஓய்வறைக்கு சென்று அவருக்கு மரியாதை அளித்தது குறிப்பிடத்தக்கது.