ஆஸ்திரேலிய மண்ணில் 8 ஆவது வீரராக களமிறங்கி மாபெரும் சாதனையை நிகழ்த்திய – நிதீஷ் ரெட்டி

Nitish-Kumar
- Advertisement -

மெல்போர்ன் நகரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தற்போது தங்களது முதல் விளையாடி வரும் இந்திய அணியானது மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 358 ரன்கள் குவித்துள்ளது. இதன் மூலம் 116 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையுடன் நாளைய நான்காம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி விளையாட இருக்கிறது.

முதல் இந்திய வீரராக நிதீஷ் ரெட்டி அசத்தல் சாதனை :

போட்டியின் மூன்றாம் நாளான இன்று இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் எளிதில் சுருண்டு விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் எட்டாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி ஆகியோரது ஜோடி 127 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தியது.

- Advertisement -

ஒரு கட்டத்தில் வாஷிங்டன் சுந்தர் 162 பந்துகளில் 50 ரன்கள் அடித்து ஆட்டமிழந்து வெளியேறிய வேளையில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த நிதீஷ் ரெட்டி 176 பந்துகளில் 10 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 105 ரன்கள் எடுத்திருக்கும் வேளையில் நாளைய ஆட்டத்திலும் மேலும் அதிரடியாக ரன்களை சேர்த்து இந்திய அணியை சற்று சாதகமான நிலைக்கு கொண்டு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது எட்டாவது இடத்தில் களமிறங்கி விளையாடிய நிதீஷ்குமார் ரெட்டி ஆஸ்திரேலியா மண்ணில் ஒரு மிகச் சிறப்பான சாதனையை நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் அவர் படைத்த சாதனை யாதனில் :

- Advertisement -

ஆஸ்திரேலிய மண்ணில் எட்டாவது இடத்தில் களமிறங்கி ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் குவித்த வீரராக சாதனை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன்னர் இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான அணில் கும்ப்ளே முதலிடத்தில் இருந்தார். கடந்த 2008-ஆம் ஆண்டு அடிலெய்டில் நடைபெற்ற போட்டியின் போது எட்டாவது வீரராக களமிறங்கிய கும்ப்ளே 87 ரன்கள் குவித்திருந்தார்.

இதையும் படிங்க : சச்சின், ரிஷப் பண்ட் ஆகியோரை தொடர்ந்து மூன்றாவது இளம் வீரராக நிதீஷ் ரெட்டி – நிகழ்த்திய வரலாறு

இந்நிலையில் இந்த போட்டியின் போது அந்த சாதனையை கடந்த நிதீஷ் ரெட்டி சதம் அடித்து அசத்தியுள்ளார். இதன் மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் எட்டாவது வீரராக களமிறங்கி சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையை நிதீஷ் ரெட்டி சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement