இதை செஞ்சா மத்ததெல்லாம் தானா நடக்கும்.. ரவீந்திர ஜடேஜா பற்றிய கேள்விக்கு வாசிங்டன் சுந்தர் பதில்

Washington Sundar 2
- Advertisement -

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்தியா 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதில் முதல் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற இந்தியா 2வது போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதைத்தொடர்ந்து 3வது போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 2 – 1* என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

ஜூலை 10ஆம் தேதி ஹராரே நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 183 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக கேப்டன் கில் 66, ருதுராஜ் கெய்க்வாட் 49 ரன்கள் எடுத்தனர். அதைத் தொடர்ந்து சேசிங் செய்த ஜிம்பாப்வே முடிந்தளவுக்கு போராடியும் 20 ஓவரில் 159/6 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

ஜடேஜாவின் இடம்:
அந்த அணிக்கு அதிகபட்சமாக டியோன் மேயர்ஸ் 65 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் எடுத்து வெற்றியில் முக்கிய பங்காற்றிய வாஷிங்டன் சுந்தர் ஆட்டநாயகன் விருது வென்றார். கடந்த 2017லயே இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் கடந்த 7 வருடங்களில் அதிகப்படியான காயங்களை சந்தித்துள்ளார். அதனால் 24 வயது மட்டுமே நிரம்பிய அவருக்கு இதுவரை இந்திய அணியில் நிலையான இடம் கிடைக்கவில்லை.

அதே சமயம் கிடைக்கும் வாய்ப்புகளில் இப்படி அசத்துவதற்கும் வாஷிங்டன் சுந்தர் தவறுவதில்லை. அதனாலேயே அவருக்கு சீரான இடைவெளிகளில் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. இந்நிலையில் 2024 டி20 உலகக் கோப்பையை வென்று ஓய்வு பெற்ற ரவீந்திர ஜடேஜாவின் இடம் இந்திய அணியில் காலியாகவே இருக்கிறது. எனவே சுழல் பந்துவீச்சு ஆல் ரவுண்டரான நீங்கள் அவருடைய இடத்தை நிரப்புவீர்களா. என்று வாஷிங்டன் சுந்தரிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.

- Advertisement -

அதற்கு அவர் பதிலளித்தது பின்வருமாறு. “நான் சிறப்பாக செயல்படும் இடங்களில் அசத்த வேண்டும். குறிப்பாக எனது தயாரிப்பில் முடிந்ததை செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளும் என்னுடைய 100% பங்களிப்பை இந்தியாவுக்காக கொடுக்க வேண்டும் என்பது நான் சமரசம் செய்து கொள்ளாத விஷயம். இதுவே என்னை நிகழ்காலத்தில் வைக்கிறது”

இதையும் படிங்க: 3 ஆவது டி20 போட்டியிலும் தோனியின் தனித்துவமான சாதனையை சமன் செய்து அசத்திய – ருதுராஜ் கெய்க்வாட்

“அதே சமயம் என்னுடைய திறமையில் நான் தன்னம்பிக்கையுடன் இருக்கிறேன். இந்தியாவுக்காக விளையாடுவது எனக்கு மிகப்பெரிய வாய்ப்பு. அதற்காக நான் ஆசீர்வாதம் செய்யப்பட்டிருக்கிறேன். எனவே தொடர்ந்து என்னை நானே தயார்படுத்திக் கொண்டு தொடர்ந்து முன்னேறிய செயல்பாடுகளை வெளிப்படுத்துவது அவசியம். அதைச் செய்தால் மற்ற அனைத்தும் தாமாக பார்த்துக் கொள்ளும்” என்று கூறினார். அதாவது தொடர்ந்து அசத்தினால் ஜடேஜாவின் இடத்தை தம்மால் பிடிக்க முடியும் என்று சுந்தர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisement