3 ஆவது டி20 போட்டியிலும் தோனியின் தனித்துவமான சாதனையை சமன் செய்து அசத்திய – ருதுராஜ் கெய்க்வாட்

Ruturaj
- Advertisement -

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் சி.எஸ்.கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் இடம் பிடித்து விளையாடி வருகிறார். இந்த தொடரின் முதல் போட்டியில் விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் 7 ரன்களில் ஆட்டமிழந்த போது தோனியின் ஜெர்சி எண்ணை அடித்து அவர் ஆட்டமிழந்தார் என்று முதல் போட்டியின் போது பேசப்பட்டது.

பின்னர் ஜூலை 7-ஆம் தேதி நடைபெற்ற இரண்டாவது போட்டியின் போது 77 ரன்கள் அடித்து ஆட்டமிழந்த போது தோனியின் 43-வது பிறந்தநாளுக்கு இரண்டு 7 ரன்களை அதாவது 77 ரன்களை அடித்த அவர் தோனிக்கு தனது பிறந்தநாள் பரிசை இரட்டிப்பாக வழங்கி இருக்கிறார் என்று ரசிகர்கள் கூறி வந்தனர்.

- Advertisement -

இப்படி முதல் இரண்டு போட்டியில் அவர் அடித்த ரன்களை வைத்து தோனியுடன் அவரை ஒப்பிட்டு ரசிகர்கள் பேசி வந்தனர். இவ்வேளையில் மூன்றாவது போட்டியிலும் அவர் அடித்த ரன்களை வைத்து தோனியுடன் ஒப்பிட்டு பல்வேறு சுவாரசிய கருத்துக்களை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் ஹராரே நகரில் நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியின் போது இந்திய அணி சார்பாக நான்காவது வீரராக களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் 28 பந்துகளை சந்தித்து 4 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் என 49 ரன்களை குவித்து ஆட்டமிழந்திருந்தார். இதன் மூலம் தோனியின் சாதனை ஒன்றிணையும் அவர் சமன் செய்துள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் கடந்த 2016-ஆம் ஆண்டு விராட் கோலி பாகிஸ்தான் அணிக்கு எதிராக சர்வதேச டி20 போட்டியில் 49 ரன்களில் ஆட்டமிழந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தி இருந்தார். அவருக்கு அடுத்து 2017-ஆம் ஆண்டு தோனி நியூசிலாந்து அணிக்கு எதிராக 49 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து அந்த சாதனையை சமன் செய்திருந்தார்.

இதையும் படிங்க : 54 ரன்ஸ்.. வாழ்வா – சாவா போட்டியில் தோற்றும் இந்திய சாம்பியன்ஸ் செமி ஃபைனல் சென்றது எப்படி?

இந்நிலையில் இந்திய வீரர்களில் மூன்றாவது வீரராக நேற்று ருதுராஜ் கெய்க்வாடும் 49 ரன்களில் ஆட்டமிழந்து சர்வதேச டி20 போட்டிகளில் தோனியின் அந்த சாதனையையும் அவர் சமன் செய்துள்ளார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Advertisement