- Advertisement -
இந்திய கிரிக்கெட்

எதுக்கு இவரை டீம்ல எடுத்தீங்க.. வாஷிங்டன் சுந்தருக்கு நேர்ந்த பரிதாபம் – கேப்டன் நீங்க செஞ்சது பெரிய தப்பு

ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நவம்பர் 2-ஆம் தேதியான இன்று ஹோபர்ட் நகரில் நடைபெற்று வரும் மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி விளையாடு வருகிறது. ஏற்கனவே இந்த டி20 கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் இந்திய அணியானது ஒரு தோல்வியை சந்தித்து பின்னடைவை சந்தித்துள்ள வேளையில் மூன்றாவது போட்டி இந்த தொடரில் நீடிக்க மிக முக்கியமான போட்டியாக மாறியுள்ளது.

வாஷிங்க்டன் சுந்தருக்கு ஏன் பவுலிங் குடுக்கல : ரசிகர்கள் கேள்வி

இந்நிலையில் இன்றைய மூன்றாவது போட்டிக்கான இந்திய அணியில் மூன்று முக்கிய மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டிருந்தன. அந்த வகையில் நடைபெற்ற மாற்றத்தில் முதல் இரண்டு போட்டிகளிலும் விளையாடியிருந்த சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

- Advertisement -

அதன்படி நடைபெற்று வரும் இந்த மூன்றாவது போட்டியில் வாஷிங்டன் சுந்தர் இடம்பெற்றதால் நிச்சயம் அவர் இந்த போட்டியின் போது பந்துவீச்சில் பவர்பிளே ஓவர்களிலேயே வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த போட்டியில் வாஷிங்டன் சுந்தருக்கு சூரியகுமார் யாதவ் செய்தது அநியாயம் என்று பலரும் அவரது முடிவை விமர்சித்து வருகின்றனர்.

ஏனெனில் வாஷிங்டன் சுந்தர் எப்போதுமே பவர்பிளே ஓவர்களில் சிறப்பாக பந்துவீசும் பழக்கமுடையவர் ஆனால் இன்றைய போட்டியின் போது பவர்பிளே ஓவர்களின் போது அவருக்கு பந்துவீச வாய்ப்பு கிடைக்கவில்லை. அதோடு மட்டுமின்றி இந்த போட்டி முழுவதுமே அவருக்கு ஒரு ஓவர் கூட பந்துவீச சூரியகுமார் யாதவ் வாய்ப்பு வழங்காதது ரசிகர்கள் மத்தியில் ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

இந்த போட்டியில் அர்ஷ்தீப் சிங், பும்ரா, வருண் சக்கரவர்த்தி, அக்சர் பட்டேல் ஆகியோர் தொடர்ச்சியாக நான்கு ஓவர்களை வீசி 16 ஓவர்களை நிறைவு செய்ய இறுதி கட்டத்திலாவது வாஷிங்டன் சுந்தர் பந்து வீசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இறுதியில் ஷிவம் துபே 3 ஓவர்களும். அபிஷேக் சர்மா ஒரு ஓவரும் வீச வாஷிங்டன் சுந்தருக்கு பந்துவீச வாய்ப்பே கிடைக்கவில்லை.

இதையும் படிங்க : இதுக்குத்தான் அவர் வேணும்ங்குறது.. 3 ஆவது டி20 போட்டியில் கலக்கிய அர்ஷ்தீப் சிங் – விவரம் இதோ

அதோடு பேட்டிங்கிலும் அவர் இந்த போட்டியில் எட்டாவது இடத்தில் தான் களமிறங்க வாய்ப்புள்ளது என்பதனால் அவர் இந்த போட்டியில் விளையாடாமலே இருந்திருக்கலாம் என்றும் அவருக்கு பதிலாக ஹர்ஷித் ராணாவையே சேர்த்திருக்கலாம் என்றும் சூரியகுமார் யாதவின் இந்த முடிவை ரசிகர்கள் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -