இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியானது ஹோபர்ட் நகரில் இன்று நவம்பர் 2-ஆம் தேதி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தங்களது அணி முதலில் பந்து வீசும் என்று அறிவித்தார். அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது :
3ஆவது டி20 போட்டியில் அசத்திய அர்ஷ்தீப் சிங் :
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்களை குவித்தது. ஆஸ்திரேலிய அணி சார்பாக அதிகபட்சமாக டிம் டேவிட் 38 பந்துகளில் 74 ரன்களையும், மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் 39 பந்துகளில் 64 ரன்களையும் குவித்து அசத்தினர்.
இந்திய அணி சார்பாக அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்களில் 35 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளையும், வருண் சக்கரவர்த்தி 4 ஓவர்கள் வீசி 33 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இந்நிலையில் இந்த போட்டியின் போது ஹர்ஷித் ராணாவிற்கு பதிலாக களமிறங்கிய அர்ஷ்தீப் சிங் அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தி 3 விக்கெட்டுகளை கைப்பற்றியது அனைவரது மத்தியிலும் பாராட்டுக்களை பெற்றுள்ளது.
ஏனெனில் இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்காத வேளையில் நம்பர் ஒன் டி20 பந்துவீச்சாளரான அவருக்கு இந்த போட்டியில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். அந்த வகையில் தனக்கு கிடைத்த வாய்ப்பில் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அவர் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை திணற வைத்தார்.
குறிப்பாக இந்த போட்டியில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியதால் விக்கெட் டேக்கரான அவரை தொடர்ந்து இந்திய டி20 அணியில் விளையாட வேண்டும் என்றும் ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் பும்ராவுடன் அர்ஷ்தீப் சிங் இணைந்து விளையாடும் போது அது இந்திய அணிக்கு மிகவும் நல்லது என்றும் பலரும் கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க : சர்வதேச டி20 போட்டிகளில் ஷிகர் தவானின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் அபிஷேக் சர்மா – விவரம் இதோ
இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 186 ரன்களை அடிக்க பின்னர் 187 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி தற்போது இரண்டாவதாக விளையாடி வருகிறது.



