IND vs ZIM : காயத்தை கடந்து போராடி இந்திய அணிக்குள் கம்பேக் கொடுத்துள்ள இளம் தமிழக வீரர் – சாத்தியமானது எப்படி, முழுவிவரம்

sundar1
- Advertisement -

வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் பங்கேற்று வருகிறது. அதில் முதலாவதாக நடந்த ஒருநாள் தொடரை ஒயிட்வாஷ் செய்து கோப்பையை வென்ற இந்தியா அடுத்ததாக நடைபெற்று வரும் டி20 தொடரின் முதல் போட்டியிலும் அபார வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது. வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதியுடன் நிறைவுக்கு வரும் இந்த சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பும் இந்திய அணி அடுத்ததாக ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கிறது. வரும் ஆகஸ்ட் 18, 20, 22 ஆகிய தேதிகளில் தலைநகர் ஹராரேயில் நடைபெறும் இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

Shikhar Dhawan Team India

- Advertisement -

கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் அனைவரும் ஓய்வெடுக்கும் நிலையில் மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் கேப்டனாக செயல்பட்ட சிகர் தவான் தலைமையில் நிறைய இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ராகுல் திரிபாதி முதல் முறையாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில் அவருடன் சுப்மன் கில், தீபக் ஹூடா, இஷான் கிசான், சஞ்சு சாம்சன் உட்பட நிறைய இளம் வீரர்கள் சேர்க்கப் பட்டுள்ளார்கள்.

சுந்தரின் கம்பேக்:
குறிப்பாக காயத்தால் ஐபிஎல் 2022 தொடரில் விளையாடிய தீபக் சஹரும் தென் ஆப்பிரிக்க தொடரின்போது விலகிய குல்தீப் யாதவும் சேர்க்கப்பட்டுள்ளார்கள். இந்த அணியில் தமிழகத்திலிருந்து இடம்பிடித்துள்ள ஒரே வீரராக இளம் சுழல்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் இடம் பெற்றுள்ளார். தமிழகத்திற்காக உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்திய இவர் கடந்த 2017இல் முதல் முறையாக இலங்கைக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார்.

sundar

ஆனால் அதன்பின் துரதிஷ்டவசமாக காயத்தால் வெளியேறிய அவர் அதிலிருந்து குணமடைந்து ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட போதிலும் தேர்வுக்குழு கண்டுகொள்ளவில்லை. அப்படியே 4 வருடங்கள் உருண்டோடிய நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் சொந்த மண்ணில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 4 வருடங்கள் கழித்து தனது 2-வது ஒருநாள் போட்டியில் விளையாடிய வாஷிங்டன் சுந்தர் அந்த தொடர் முழுவதும் முழுமையாக வாய்ப்பு பெற்ற முடிந்தளவுக்கு சிறப்பாக செயல்பட்டார்.

- Advertisement -

இதுவரை மொத்தமாக 4 வருடங்களில் வெறும் 4 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள சமீபத்திய ஐபிஎல் 2022 தொடரில் ஹைதராபாத் அணிக்கு மிகப்பெரிய தொகைக்கு விளையாடிய போது மீண்டும் துரதிருஷ்டவசமாக காயத்தால் பாதியிலேயே வெளியேறினார். அதனால் அதன்பின் நடந்த தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பை தவறவிட்ட அவர் அதிலிருந்து குணமடைய சில வாரங்கள் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் முகாமிட்டு பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார்.

Sundar-1

கவுண்டியில் கலக்கல்:
அதனால் காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்த அவர் இந்திய அணிக்குள் நுழைவதற்காக தற்போது நடைபெற்று வரும் டிஎன்பிஎல் 2022 தொடருக்கு பதிலாக இங்கிலாந்தில் நடைபெறும் புகழ்பெற்ற உள்ளூர் கிரிக்கெட் தொடரான கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் சவுரவ் கங்குலி போன்ற இந்திய ஜாம்பவான்கள் விளையாடிய லன்ஷைர் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்து கொண்டார்.

- Advertisement -

அந்த நிலையில் கடந்த வாரம் முதல் முறையாக கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் நார்த்தம்டன்ஷைர் அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமான அவர் தனது முதல் இன்னிங்சிலேயே அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை எடுத்தார். மேலும் பேட்டிங்கிலும் கடைசி இன்னிங்சில் தனது அணி தடுமாறியபோது 34* ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற முக்கிய பங்காற்றினார்.

Washington Sundar County

அதேபோல் கென்ட் அணிக்கு எதிரான 2-வது போட்டியிலும் முக்கியமான 3 விக்கெட்டுகளை எடுத்த அவர் சுழல் பந்துவீச்சு ஆல்-ரவுண்டராக அசத்தி வருகிறார். அதனால் கவனம் ஈர்க்கப்பட்ட தேர்வுக்குழு இந்த ஜிம்பாப்வே தொடரில் 2-வது தர இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியில் அவரை தாமாக முன்வந்து சேர்த்துள்ளது. இதனால் தொடர்ந்து கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் விளையாடவுள்ள வாசிங்டன் சுந்தர் ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி புறப்படும்போது அணியுடன் இணைந்து கொள்ளவுள்ளார்.

இதையும் படிங்க: IND vs ZIM : ஜிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் தொடரை தவறவிட்டது ஏன்? – கே.எல் ராகுல் கொடுத்த விளக்கம்

ரசிகர்கள் மகிழ்ச்சி:
இப்படி அடிக்கடி காயமடைந்தாலும் அதற்காக மனம் தளராமல் தொடர்ந்து பயிற்சிகளையும் முயற்சிகளையும் எடுத்து உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தலாக செயல்பட்டு மீண்டும் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிக்கும் வாசிங்டன் சுந்தர் இனிமேலாவது காயமடையாமல் தொடர்ந்து விளையாடி இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்பதே தமிழக ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

Advertisement