ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் வாய்ப்பினை பெறாத தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் அடுத்ததாக நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் வாய்ப்பினை பெற்று மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியிருந்தார். அதன் காரணமாக இனிவரும் டி20 தொடர்களிலும் அவர் தொடர்ச்சியாக இந்திய அணியில் இடம் பிடித்து விளையாடுவார் என்று தெரிகிறது.
ஸ்பெஷல் அவார்டினை வென்ற வாஷிங்டன் சுந்தர் :
ஏற்கனவே ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் நிரந்தர இடத்தினை பிடித்துள்ள வாஷிங்டன் சுந்தர் தற்போது டி20 போட்டிகளில் நிரந்தர இடத்தை பிடித்துள்ளார். அந்த வகையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியின் போது வாய்ப்பினை பெற்ற வாஷிங்டன் சுந்தர் 23 பந்துகளை சந்தித்து 3 பவுண்டரி 4 சிக்ஸர்கள் என 49 ரன்கள் குவித்து அசத்தினார்.
அதிலும் குறிப்பாக அந்த போட்டியில் பின் வரிசையில் களமிறங்கிய அவர் ஆட்டமிழக்காமல் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது பலரது மத்தியிலும் பாராட்டினை பெற்றது. அதற்கடுத்து நான்காவது போட்டியிலும் 7 பந்துகளை சந்தித்த அவர் 2 பவுண்டரிகளுடன் 12 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார்.
அதோடு பந்து வீச்சிலும் 1.2 ஓவர்களை வீசிய அவர் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார். அவரது இந்த சிறப்பான செயல்பாடு பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது. அதோடு இனிவரும் டி20 தொடர்களிலும் அவர் தொடர்ச்சியாக இந்திய அணியில் இடம் பிடிப்பார் என்றும் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடர் முடிந்த கையோடு இந்திய அணி ஓய்வறையில் வெற்றியினை கொண்டாடியுள்ள வேளையில் ஒவ்வொரு தொடர் முடிவடைந்த கையோடும் அந்த தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு தற்போதைய இந்திய அணியில் சிறப்பு பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க : சஞ்சு சாம்சனுக்காக சி.எஸ்.கே அணி ஜடேஜாவை விட்டுக்கொடுத்தா அது மிகப்பெரிய தப்பு – பிரியான்க் பஞ்சால் பதிவு
அந்த வகையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்ட வீரராக வாஷிங்டன் சுந்தர் தேர்வு செய்யப்பட்டு அவருக்கு இந்த தொடருக்கான இம்பேக்ட் பிளேயர் என்கிற ஸ்பெஷல் அவார்டு நிர்வாக ஊழியரின் மூலம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



