சஞ்சு சாம்சனுக்காக சி.எஸ்.கே அணி ஜடேஜாவை விட்டுக்கொடுத்தா அது மிகப்பெரிய தப்பு – பிரியான்க் பஞ்சால் பதிவு

Jadeja and Samson
- Advertisement -

அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மினி ஏலமனாது நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக டிரேடிங் முறையும் நடைமுறையில் உள்ளதால் குறிப்பிட்ட சில நட்சத்திர வீரர்கள் இந்த டிரேடிங் முறையில் அணிமாற்றம் செய்ய வாய்ப்பு இருப்பதாக பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு மிகப்பெரிய டிரேடிங்காக பார்க்கப்படும் சஞ்சு சாம்சனின் டிரேடிங் விடயம் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

சஞ்சு சாம்சனுக்காக ஜடேஜாவை வெளியேற்றினால் அது மிகப்பெரிய தவறு : பிரியான்க் பஞ்சால்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து வெளியேற இருக்கும் அவரை சிஎஸ்கே அணியின் நிர்வாகம் வாங்க விரும்புவதாக கடந்த சில நாட்களாகவே அதிகளவு செய்திகள் வெளியாகி வருகின்றன. அதோடு சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு வரும் பட்சத்தில் சி.எஸ்.கே அணியிலிருந்து ரவீந்திர ஜடேஜா மற்றும் பிரேவிஸ் ஆகியோரை தங்களது அணிக்கு வழங்குமாறு ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகமும் அழுத்தம் கொடுத்து வருவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

இதன் காரணமாக இன்னும் சில தினங்களில் இந்த டிரேடிங் நடைபெறுமா? நடைபெறாதா? என்பது உறுதியாகும். இந்நிலையில் சஞ்சு சாம்சனை சென்னை அணிக்குள் கொண்டு வருவதற்காக ரவீந்திர ஜடேஜாவை சிஎஸ்கே அணி வெளியேற்றினால் அது சிஎஸ்கே அணி செய்யும் மிகப்பெரிய தவறாக அமையும் என்று முன்னாள் குஜராத் வீரரான பிரியான்க் பஞ்சால் தனது கருத்தினை சமூக வலைதளத்தின் மூலம் பகிர்ந்துள்ளார்.

அந்த வகையில் அவர் பகிர்ந்துள்ள ஒரு பதிவில் குறிப்பிடப்பட்டதாவது : ரவீந்திர ஜடேஜாவை டிரேடிங் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அனுப்பிவிட்டு சஞ்சு சாம்சனை சென்னை அணி தங்களது அணிக்குள் கொண்டு வந்தால் அது மிகப் பெரிய தவறாக மாறும். ஏனெனில் சி.எஸ்.கே அணியில் ஒரு லெஜெண்டாக தற்போது ரவீந்திர ஜடேஜா இருந்து வருகிறார். இத்தனை ஆண்டு காலம் ஓய்வின்றி சிஎஸ்கே அணிக்காக தனது முழு பங்களிப்பையும் ஜடேஜா வழங்கியுள்ளார்.

- Advertisement -

அவரைப் போன்ற ஒரு அர்ப்பணிப்புடன் விளையாடி வரும் வீரரை சென்னை அணி வெளியேற்றினால் அது சரியான முடிவு கிடையாது. சிஎஸ்கே அணி இத்தனை சாம்பியன் பட்டங்களை வென்றுள்ள வேளையில் அந்த வெற்றிகளுக்கு எல்லாம் முக்கிய காரணமாக திகழ்ந்து சென்னை அணியின் ஒரு அடையாளமாக ரவீந்திர ஜடேஜா தற்போது மாறியிருக்கிறார்.

இதையும் படிங்க : இதுல எந்த ஆச்சரியமும் இல்ல.. அபிஷேக் சர்மா இந்த பாராட்டுக்கு தகுதியானவர் – கெவின் பீட்டர்சன் பதிவு

எனவே அவரை வெளியேற்றுவது நியாயமற்றது என பிரியான்க் பஞ்சால் தனது கருத்தினை பகிர்ந்துள்ளார். அவர் குறிப்பிட்டது போலவே சென்னை அணிக்காக கடந்த பல ஆண்டுகளாக விளையாடி வரும் ஜடேஜா வேறுயெந்த ஒரு அணிக்கும் செல்லாமல் தொடர்ந்து சிஎஸ்கே அணிக்காக தனது முழு பங்களிப்பையும் வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement