இந்திய அணிக்காக 7 ஆண்டுகள் 68 போட்டிகளில் விளையாடி முதல் முறையாக சாதித்த வாஷிங்டன் சுந்தர் – விவரம் இதோ

Washington
- Advertisement -

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியானது நேற்று ஹராரே நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியது. அப்படி பெற்ற இந்த வெற்றியின் மூலம் இந்த தொடரில் இரண்டாவது வெற்றியினை பதிவு செய்துள்ள இந்திய அணியானது இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது.

இன்னும் எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றால் கூட இந்திய அணி இந்த தொடரை கைப்பற்றும் என்பது உறுதியாகி உள்ள வேளையில் தற்போதே இந்திய அணிக்கு கோப்பை வந்துவிட்டது என்று கூறலாம்.

- Advertisement -

இந்நிலையில் நேற்று நடைபெற்ற இந்த மூன்றாவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 182 ரன்களை குவிக்க பின்னர் 183 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஜிம்பாப்வே அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் மட்டுமே குவித்தது.

இதன்காரணமாக இந்திய அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது இந்திய அணியின் சார்பாக சிறப்பாக பந்துவீசிய வாஷிங்டன் சுந்தர் 4 ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார். அவரது சிறப்பான பந்துவீச்சே வெற்றிக்கு காரணம் என்பதால் அவருக்கு சர்வதேச டி20 போட்டியில் முதல்முறையாக ஆட்டநாயகன் விருது கிடைத்தது.

- Advertisement -

குறிப்பாக இந்திய அணிக்காக கடந்த 2017-ஆம் ஆண்டு அறிமுகமான வாஷிங்டன் சுந்தர் இதுவரை 19 ஒருநாள் போட்டிகள், 46 டி20 போட்டிகள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் என 68 போட்டிகளில் பங்கேற்று விளையாடி இருக்கும் வேளையில் தற்போது தான் முதல் முறையாக சர்வதேச கிரிக்கெட்டில் அவர் ஆட்டநாயகன் விருதினை பெற்று அசத்தியுள்ளார்.

இதையும் படிங்க : 121க்கு ஆல் அவுட்.. வெ.இ அணியை தெறிக்க விட்ட அறிமுக இங்கிலாந்து வீரர்.. 29 வருடம் கழித்து அபார சாதனை

தோனியின் தலைமையிலான இந்திய அணியில் அவர் அறிமுகமாகி இருந்தாலும் ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோரது ஆதிக்கத்தால் அவ்வப்போதே இடம் பிடித்து வந்த சுந்தர் தற்போது சீனியர் வீரர்கள் அனைவரும் அணியில் இருந்து நகர்ந்துள்ள வேளையில் நிரந்தர இடத்தை பிடிப்பதற்காக அவர் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement