இந்திய டி20 அணியில் இருந்து முற்றிலுமாக ஓரங்கட்டப்பட்ட தமிழக வீரர் வாஷிங்க்டன் சுந்தர் – இதை படிங்க புரியும்

Sundar-1
- Advertisement -

இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் பதினைந்தாவது ஐபிஎல் தொடர் இம்மாதம் 29-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இந்த ஐபிஎல் தொடருக்கு பின்னர் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தென்னாப்பிரிக்க அணியை எதிர்த்து விளையாட உள்ளது. ஏற்கனவே இந்திய அணியில் தொடர்ச்சியாக இடம் பிடித்து விளையாடி வரும் சீனியர் வீரர்கள் ஐபிஎல் தொடரிலும் விளையாடியதன் காரணமாக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இந்த தொடரில் பல சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

INDvsRSA

- Advertisement -

அந்த வகையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி நேற்று பிசிசிஐ மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. கே எல் ராகுல் தலைமையிலான அந்த அணியில் 18 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். இந்த இந்திய அணியில் தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு அளிக்கப்படாதது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐ.பி.எல் சிறப்பாக விளையாடிய தினேஷ் கார்த்திக் இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்துள்ள அதே வேளையில் வாஷிங்டன் சுந்தருக்கு இடம் கிடைக்காதது சற்று வருத்தமான விடயமாக மாறியுள்ளது.

22 வயதான தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் இந்திய அணிக்காக 2017 ஆம் ஆண்டு அறிமுகமாகி விளையாடி வருகிறார். இதுவரை நான்கு டெஸ்ட் போட்டிகள், 4 ஒருநாள் போட்டிகள் மற்றும் 31 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள வாஷிங்டன் சுந்தர் டி20 அணியின் முதன்மை வீரராக செயல்பட்டு வந்தார். குறிப்பாக பவர்பிளே ஓவர்களில் அற்புதமாக பந்துவீசும் அவரது அந்த திறனுக்காகவே இந்திய அணி அவரை தொடர்ச்சியாக அணியில் நீடிக்க வைத்தது. ஆனால் இந்த தென்னாப்பிரிக்க தொடருக்கான அணியில் இருந்து அவர் புறக்கணிக்கப்பட்டு உள்ளதால் இனி இந்திய அணியில் அவர் இடம் பிடிப்பது கஷ்டம் என்று தெரிகிறது.

Sundar-1

ஏனெனில் வாஷிங்டன் சுந்தர் பந்து வீச்சினை தவிர்த்து பேட்டிங்கில் பெரிய அளவு அதிரடி காட்டுவதில்லை ஆனால் ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் பட்டேல் போன்றோர் பேட்டிங்கிலும் தங்களது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்துவதால் அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று தெரிகிறது. அது தவிர்த்து சாஹல், குல்தீப் யாதவ் போன்றோர் மீண்டும் பார்முக்கு திரும்பி உள்ளதாலும் வாஷிங்டன் சுந்தர் இடத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதேபோன்று இளம் வீரரான ரவி பிஷ்னாய்யும் சிறப்பாக பந்து வீசி வருவதால் கிட்டத்தட்ட தற்போதைய இந்திய அணியில் 5 முதல் 6 சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பிடித்துள்ளனர்.

- Advertisement -

அதனால் இவர்கள் அனைவரையும் மீறி வாசிங்டன் சுந்தர் இனி அணியில் இடம்பிடிக்க வேண்டும் எனில் கட்டாயம் பேட்டிங்கில் தனது திறனை நிரூபிக்க வேண்டும். அப்படியில்லையென்றால் கிட்டத்தட்ட அவர் இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்படுவது உறுதி என்றே கூறலாம். இருப்பினும் வாஷிங்டன் சுந்தர் டொமஸ்டிக் போட்டிகளில் தமிழக அணிக்காக விளையாடும் போது டாப் ஆர்டரில் களமிறங்கி வருவதால் நிச்சயம் அவரால் பேட்டிங்கில் தன்னை முன்னேற்றிக் கொண்டு மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்க முடியும் என்று பலரும் கூறி வருகின்றனர்.

இதையும் படிங்க : INDvsENG : மீதமிருந்த ஒரு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு. நட்சத்திர வீரர் நீக்கம் – முழுலிஸ்ட் இதோ

அதே வேளையில் அவர் இந்திய அணியில் இடம்பிடிக்காததற்கு காரணமாக காயமும் ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் தொடர்ச்சியாக காயம் காரணமாக அடுத்தடுத்து தொடர்களை தவறவிட்ட வாஷிங்டன் சுந்தர் ஐபிஎல் தொடரின்போது இருமுறை காயமடைந்தார் அதுவும் அவர் இந்திய அணியில் இடம்பெறாததற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று பேசப்படுகிறது.

Advertisement