இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் முதலாவது டி20 போட்டியில் விளையாடிய சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியானது 43 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
அதன்படி நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இலங்கை அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் இழந்து 213 ரன்களை குவித்தது.
பின்னர் 214 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இலங்கை அணியானது 19.2 ஓவர்களில் 170 ரன்களுக்கு ஆல் அவுட்டானதன் காரணமாக இந்திய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் போது தமிழக ஆல்ரவுண்டான வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டது ரசிகர் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
ஏனெனில் அண்மையில் நடைபெற்ற முடிந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் ஷிவம் துபே, சஞ்சு சாம்சன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம்பெற்று இருந்த வேளையில் அவர்களுக்கு பதிலாக ரிங்கு சிங், ரிஷப் பண்ட் மற்றும் ரியான் பராக் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த தேர்வு ரசிகர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஏனெனில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் மிகச் சிறப்பாக செயல்பட்டனர். அதிலும் குறிப்பாக வாஷிங்டன் சுந்தர் நடைபெற்று முடிந்த அந்த டி20 தொடரில் தொடர் நாயகன் விருதை வென்றிருந்த வேளையில் இந்த தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு பதிலாக நேற்று ரியான் பராக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது அனைவரது மத்தியிலும் பேசுபொருளாக மாறியது.
இதையும் படிங்க : மகளிர் ஆசிய கோப்பை 2024 : 7 முறை சாம்பியன் இந்தியாவை ஃபைனலில் சாய்த்த இலங்கை.. சரித்திர வெற்றி
மேலும் தொடர்ச்சியாக இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டு வரும் சுந்தருக்கு நேற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது. மேலும் ஜடேஜா இல்லாத வேளையில் அவரது இடத்தை சுந்தர் நிரப்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவரை சேர்க்காதது நிச்சயம் பெரிய ஏமாற்றம் என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



