சுந்தர் இங்கிலாந்து தொடரில் விளையாடுவதற்காக அவரது தந்தை செய்த தியாகம் – நெகிழவைத்த செயல்

Sundar-dad

இந்திய அணி அடுத்ததாக ஜூன் மாதம் 18 ஆம் தேதி நடைபெற உள்ள நியூசிலாந்து அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும், அதன் பிறகு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராகவும் விளையாட தற்போது தயாராகி வருகிறது. மேலும் இந்த சுற்றுப் பயணத்திற்கு முன்னர் மும்பையில் இந்திய அணி ஒன்றிணைந்து 14 நாட்கள் குவரான்டைன் இருந்து அதன் பின்னர் அங்கிருந்து புறப்படும் என்றும் இங்கிலாந்து சென்றும் இந்திய அணி தனிமைப்படுத்தப்பட்டு பிறகே இறுதி போட்டியில் பங்கேற்கும் என்று பிசிசிஐ அறிவித்திருந்தது.

IND

மேலும் இந்த தொடருக்கான அணி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே வீரர்கள் அனைவரும் பத்திரமாக தங்கள் வீட்டில் இருக்க வேண்டும் என்றும் இந்த தொடருக்கு வீரர்கள் செல்ல வேண்டும் என்றால் நிச்சயம் கொரோனா பாதிப்பு இருக்கக் கூடாது என்றும் பிசிசிஐ ஒரு கட்டாயமான கோரிக்கையை விடுத்திருந்தது. அதன்படி நாளை முதல் மும்பையில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட உள்ள இந்திய வீரர்கள் ஜூன் 2ஆம் தேதி இங்கிலாந்து புறப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் முதல் முறையாக இங்கிலாந்து மண்ணில் விளையாடுவதற்காக தயாராக உள்ளார். இந்நிலையில் இந்த தொடரில் அவர் விளையாடவேண்டும் என்று அவரது தந்தை செய்த ஒரு செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி சுந்தரின் தந்தை வருமானவரித் துறையில் பணியாற்றி வருவதால் வாரம் மூன்று நான்கு நாட்கள் அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் இதன் காரணமாக அவர் வெளியே சென்று வந்தால் சுந்தருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற காரணத்திற்காக ஐபிஎல் தொடரில் இருந்து சுந்தர் வீடு திரும்பிய பின்னர் அவரது தந்தை அவரது வீட்டிற்கு செல்லாமல் தனியாக தங்கி அலுவலகம் சென்று வருகிறாராம்.

Sundar dad 1

மேலும் தான் வெளியே சென்று வருவதால் சுந்தருக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காகவே இந்த முடிவை எடுத்தவர் தினந்தோறும் வீடியோ காலின் மூலம் தனது மகன் மனைவியிடம் பேசி வருகிறாராம். சுந்தரின் அம்மா மற்றும் சுந்தர் ஆகியோர் வெளியே எங்கும் செல்ல மாட்டார்கள் என்ற காரணத்தினால் அவரது தந்தை தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு வேறொரு வீட்டில் தங்கி அலுவலகம் சென்று வருகிறாராம்.

- Advertisement -

sundar 2

சுந்தர் இந்த இங்கிலாந்து தொடருக்காக இந்திய அணியில் இணையும் வரை வீட்டிற்கு வராமல் இருக்கிறார். தன்னால் தனது மகனின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் கெட்டுவிடக்கூடாது என்பதற்காக சுந்தரின் தந்தை செய்துள்ள இந்த செயல் தற்போது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement