அவ்ளோ திமிர் ஆகிடுச்சா? இந்திய வீரர் சுந்தரை விளாசும் ரசிகர்கள்.. இன்னொரு தரப்பு பதிலடி

Washington Sundar
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணிக்காக தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் 2017 முதல் விளையாடி வருகிறார். முதல் 5 வருடங்களில் பெரும்பாலும் காயத்தால் தொடர்ச்சியாக விளையாடாத அவர் 2021 காபா டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். தற்போது பயிற்சியாளராக கௌதம் கம்பீர் வந்தது முதல் அவருக்கு 3 வகையான இந்திய அணியிலும் ஓரளவு நல்ல வாய்ப்பை வழங்கி வருகிறார்.

அந்த வாய்ப்பில் வாஷிங்டன் சுந்தரும் ஓரளவு நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். குறிப்பாக கடந்த 2025 இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அவர் ஆல் ரவுண்டராக நன்றாக விளையாடி இந்தியா தொடரை சமன் செய்ய உதவினார். அதன் காரணமாக ஐசிசி 2026 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியாவுக்காக விளையாட அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

அவ்ளோ திமிரா:

இந்நிலையில் வாஷிங்டன் சுந்தரை பற்றிய ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தன்னுடைய ஹோட்டல் அறையிலிருந்து வெளியேறும் அவரிடம் சில ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்புகிறார்கள். அவர்களிடம் எடுத்த எடுப்பிலேயே சுந்தர் வேண்டாம் என்று சொல்வதாக தெரிகிறது.

இருப்பினும் விடாத ரசிகர்கள் அவரை சுற்றி புகைப்படம் எடுக்க முயற்சிக்கிறார்கள். ஆனாலும் அதற்கு விருப்பமில்லாத சுந்தர் தன்னுடைய முகத்தைக் காட்டாமல் பின்வாங்கி செல்கிறார். அதைப் பார்க்கும் ரசிகர்கள் இந்திய அணிக்காக கிரிக்கெட்டில் பெரியளவில் சாதிக்கவில்லை, அதற்குள் இவ்வளவு திமிரா? என்று அவரை சமூக வலைதளங்களில் விமர்சிக்கின்றனர்.

- Advertisement -

ரசிகர்கள் பதிலடி:

அத்துடன் கிரிக்கெட்டில் ரசிகர்களான நாங்கள் ஆதரவு கொடுக்காவிட்டால் உங்களுக்கு எப்படி இவ்வளவு புகழ் கிடைத்திருக்கும் என்றும் ரசிகர்கள் விமர்சிக்கின்றனர். ஆனால் அதற்கு மற்றொரு தரப்பு ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். அதாவது இந்தியாவுக்காக விளையாடாத சமயத்தில் சுந்தர் தம்முடைய தனிப்பட்ட வாழ்வில் சுதந்திரமாக இருக்க விரும்புவதாக இன்னொரு தரப்பு ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள்.

இதையும் படிங்க: தோனியை பாத்து இதை செய்ங்கன்னு.. அவங்ககிட்ட சொன்னதே சூப்பர் ஓவரில் ஜெய்க்க காரணம்.. டு பிளேஸிஸ்

எனவே வேண்டாம் என்று சொல்லியும் அவரை வளைத்து புகைப்படம் எடுக்க முயற்சிப்பது மரியாதையானது கிடையாது என்று ரசிகர்கள் கூறுகிறார்கள். அத்துடன் இதற்கு முந்தைய காலங்களில் இந்தியாவுக்காக விளையாடும் போது மைதானத்தில் பலமுறை சுந்தர் ரசிகர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். அத்துடன் வேண்டிய இடங்களில் ஆட்டோஃகிராப் போட்டும் கொடுத்துள்ளதை மறக்காதீர்கள் என்று ரசிகர்கள் பதிலடி கொடுப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement