
இந்திய கிரிக்கெட் அணி ஓவல் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற 5வது டெஸ்ட் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அந்தப் போட்டியில் கடைசி நாளில் 4 விக்கெட்டுகளை கைவசம் வைத்திருந்த இங்கிலாந்துக்கு வெறும் 35 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அதனால் இந்திய அணி கண்டிப்பாக தோல்வியை சந்திக்கும் என்று இந்தியாவை சேர்ந்த ரசிகர்களே சோகத்தில் ஆழ்ந்தனர்.
ஆனால் கடைசி நாளில் நெருப்பாக பவுலிங் செய்த இந்தியா 28 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்தது. அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக 10 ரன்னுக்கும் குறைவாக ஒரு வெற்றியைப் பெற்று இந்தியா சரித்திரம் படைத்தது. அத்துடன் இங்கிலாந்தை அதனுடைய சொந்த மண்ணில் வெல்ல விடாமல் 2 – 2 (5) என்ற கணக்கில் இந்தியா ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பையை பகிர்ந்து கொண்டது.
அந்த வெற்றிக்கு 9 விக்கெட் எடுத்த முக்கிய பங்காற்றிய முகமது சிராஜ் ஆட்டநாயகன் விருதை வென்றார். குறிப்பாக கடைசி நாளில் 3 விக்கெட்டுகளை எடுத்த அவர் அசாத்தியமான வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். அதன் காரணமாக முகமது சிராஜை இந்திய ரசிகர்கள் தற்போது சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகிறார்கள்.
அதே சமயம் இந்த வெற்றியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் கருப்பு குதிரையாக செயல்பட்டார் என்றே சொல்லலாம். ஏனெனில் 3வது நாள் மாலையில் களமிறங்கிய அவர் கடைசி நேரத்தில் சரவெடியாக விளையாடி 53 (46) ரன்கள் குவித்து இந்தியா 374 ரன்களை இலக்காக நிர்ணயிக்க உதவினார். குறிப்பாக 0* (2) ரன்கள் எடுத்த பிரசித் கிருஷ்ணாவுடன் சேர்ந்து கடைசி விக்கெட்டுக்கு மட்டும் அவர் 39 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்.
அதிலும் குறிப்பாக கடைசி நேரத்தில் தில்லாக பேட்டிங் செய்த சுந்தர் மினி இடியைப் போன்ற சத்தத்துடன் 4 பிரம்மாண்ட சிக்ஸர்களை பறக்க விட்டார். ஒருவேளை அந்த 39 ரன்களை அவர் அடிக்காமல் இருந்திருந்தால் போட்டி 4வது நாளிலேயே மழை வருவதற்கு முன் முடிந்திருக்கும். கடைசியில் பார்த்தால் இந்தியா வெறும் 6 ரன் வித்தியாசத்தில் வென்றுள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவுக்காக 25 நாள் உழைப்பு வீண் போகல.. அது எங்கள உறிஞ்சாலும் திருப்தியை கொடுத்துருக்கு.. ராகுல் பேட்டி
அதனால் கடைசியில் சுந்தர் அடித்த 3 சிக்சர்களில் ஒரு சிக்ஸர் தான் இந்தியாவின் 6 ரன்கள் வித்தியாச வெற்றியில் கருப்பு குதிரையாக ஓடியுள்ளது. இங்கே பிரசித் கிருஷ்ணா உள்ளிட்ட அனைத்து 11 வீரர்களுமே வெற்றியில் முக்கிய பங்காற்றினார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் கடைசி நேரத்தில் தமிழகத்தின் சுந்தர் அடித்த 3 சிக்சர்களில் ஒரு சிக்ஸர் தான் இந்தியாவின் சரித்திர வெற்றிக்கான அடித்தளத்தை அமைத்தது யாராலும் மறுக்க முடியாது.