இந்தியாவுக்காக 25 நாள் உழைப்பு வீண் போகல.. அது எங்கள உறிஞ்சாலும் திருப்தியை கொடுத்துருக்கு.. ராகுல் பேட்டி

KL Rahul
- Advertisement -

இங்கிலாந்தில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2 – 2 என்ற கணக்கில் இந்திய அணி போராடி சமன் செய்தது. குறிப்பாக கடைசி போட்டியின் கடைசி நாளில் இங்கிலாந்துக்கு 35 ரன்கள் தேவைப்பட்டதால் இந்தியா தோற்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி நாளில் நெருப்பாக பௌலிங் செய்த இந்தியா 28 ரன்கள் மட்டும் கொடுத்து எஞ்சிய 4 விக்கெட்டுகளையும் சாய்த்தது.

அதனால் 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக பத்துக்கும் குறைவான ரன்னுக்குள் வெற்றியைப் பெற்று சரித்திரம் படைத்துள்ளது. இந்நிலையில் இத்தொடரில் 5 போட்டிகளில் 25 நாட்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் இந்தியாவுக்கு கொடுத்ததாக கே.எல ராகுல் தெரிவித்துள்ளார். மேலும் இத்தொடர் இந்திய வீரர்களிடம் இருந்து அனைத்தையும் உறிஞ்சி கொண்டு திருப்தியான வெற்றியை கொடுத்துள்ளதாகவும் ராகுல் கூறியுள்ளார்.

- Advertisement -

25 நாட்கள் உழைப்பு:

இது பற்றி தினேஷ் கார்த்திக்கிடம் அவர் போட்டியின் முடிவில் பேசியது பின்வருமாறு. “இந்த வெற்றி உணர்வை வார்த்தைகளால் விவரிப்பது கடினமாக உள்ளது. இந்த வெற்றி மனதளவில், உடலளவில், உணர்வளவில் எங்களின் ஒவ்வொரு இன்ச்சிலும் இருந்து அனைத்தையும் கொண்டு வர வைத்தது. இந்த 25 நாட்கள் முடிவில் நாங்கள் 2 – 2 என்ற கணக்கில் நிற்கிறோம்”

“இந்த தொடரை சமன் செய்தது திருப்தியை கொடுத்துள்ளது. எங்கள் மேலே நாங்கள் பெருமையாக இருக்கிறோம். உண்மையில் நாங்கள் தொடரை வெல்ல விரும்பினோம். ஆனால் இளம் அணி இங்கே வந்து எங்களாலும் இந்தியாவுக்கு வெளியே வென்று காட்ட முடியும் என்பதை உலகிற்கு காண்பித்துள்ளது. இது எங்களுடைய அணியில் என்ன இருக்கிறது என்பதற்கு உண்மையான சோதனையாக அமைந்தது”

- Advertisement -

ராகுல் பெருமிதம்:

“இன்று காலையில் உச்சகட்ட அழுத்தம் இருந்தது. நிறைய நடந்த போதிலும் நாங்கள் விளிம்பை விடவில்லை. அதனால் அமைதியற்ற நிலைக்குத் தள்ளப்பட்ட நாங்கள் கேட்ச்சை சிக்ஸராக தவற விட்டதால் நிறைய ரன்கள் கொடுத்தோம். ஆனால் தற்போது அதிலிருந்து நிவாரணம், திருப்தி, மகிழ்ச்சியான உணர்வு ஆகியவை கிடைத்துள்ளது. இந்த வெற்றியில் எங்களுடைய துணை பயிற்சிகளார்கள் உட்பட அனைவரும் முக்கிய பங்காற்றினர்”

இதையும் படிங்க: அதுக்கு நன்றி பையா.. இந்தியாவின் ஓவல் சரித்திர வெற்றி குறித்து கிங் கோலி பாராட்டு.. சிராஜ் கொடுத்த நெகிழ்ச்சி பதில்

“கடந்த 2 மாதங்களாக நாங்கள் வெளிப்படுத்திய உழைப்பிற்காக மிகவும் பெருமைப்படுகிறோம்” என்று கூறினார். மொத்தத்தில் இந்திய அணி வரலாற்றில் மறக்க முடியாத ஒரு வெற்றியைப் பெற்றுள்ளது. அதனால் சுப்மன் கில் தலைமையில் இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களுடைய புதிய பயணத்தை வெற்றிகரமாக துவங்கியுள்ளது என்றும் சொல்லலாம்.

Advertisement