அதுக்கு நன்றி பையா.. இந்தியாவின் ஓவல் சரித்திர வெற்றி குறித்து கிங் கோலி பாராட்டு.. சிராஜ் கொடுத்த நெகிழ்ச்சி பதில்

Virat Kohli
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 – 2 என்ற கணக்கில் சமன் செய்தது. குறிப்பாக 4வது போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியா போராடி டிரா செய்தது. அதை விட லண்டன் ஓவல் மைதானத்தில் கடைசி போட்டியில் இந்தியா தோல்வியின் விளிம்புக்கே சென்று விட்டது என்று சொல்லலாம்.

ஏனெனில் அந்தப் போட்டியில் கடைசி நாளில் 4 விக்கெட்டுகளை கையில் வைத்திருந்த இங்கிலாந்துக்கு வெறும் 35 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அதனால் இந்திய அணி கண்டிப்பாக தோற்கும் என்பதை பலருடைய எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் கடைசி நாளில் நெருப்பாக பவுலிங் செய்த இந்தியா வெறும் 28 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்தது.

- Advertisement -

வரலாற்று வெற்றி:

அதனால் 6 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியைப் பெற்ற இந்தியா ஆண்டரசன் – டெண்டுல்கர் கோப்பையை பகிர்ந்து கொண்டது. அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக 10 ரன்னுக்கும் குறைவாக ஒரு வெற்றியை பெற்று இந்தியா சாதனை படைத்தது. அந்த வெற்றிக்கு மொத்தம் 9 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய முகமது சிராஜ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

குறிப்பாக கடைசி நாளில் மட்டும் 3 விக்கெட்டுகளை எடுத்து அவருக்கு ஜோடியாக இங்கிலாந்துக்கு சவாலைக் கொடுத்த பிரசித் கிருஷ்ணா ஒரு விக்கெட்டை எடுத்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார். இந்நிலையில் இளம் இந்திய அணியின் இந்த வெற்றி குறித்து முன்னாள் கேப்டன் ட்விட்டரில் பாராட்டியுள்ளார். கடைசியாக 2021இல் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்தியாவை கேப்டனாக விராட் கோலி வெற்றி பெற வைத்தார்.

- Advertisement -

தங்கமான பதில்:

தற்போதைய வெற்றி குறித்து அவர். “இந்திய அணி சிறப்பான வெற்றி பெற்றுள்ளது. பிரசித் கிருஷ்ணா மற்றும் சிராஜ் ஆகியோரின் உறுதித்தன்மை நமக்கு தனித்துவமான வெற்றியைக் கொடுத்துள்ளது. இந்திய அணிக்காக தன்னுடைய அனைத்தையும் கொடுத்த சிராஜுக்கு இங்கே ஸ்பெஷல் பாராட்டு. அவருக்காக மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: இங்கிலாந்தில் பும்ரா இல்லனா என்ன? இந்தியாவின் ஹீரோவாக பும்ராவின் வரலாற்று சாதனையை சமன் செய்த சிராஜ்

அதை பார்த்த முகமது சிராஜ். “என்னை நம்பியதற்கு நன்றி பையா” என்று விராட் கோலிக்கு தங்கமான பதிலைக் கொடுத்துள்ளார். அதாவது ஆரம்ப காலங்களில் தடுமாற்றமாக செயல்பட்ட சிராஜ் நிறைய கிண்டல்களை சந்தித்தார். அப்போது கேப்டனாக இருந்த விராட் கோலி அவருக்கு நம்பி ஆதரவுகளை கொடுத்தார். அதைப் பயன்படுத்தி வளர்த்த சிராஜ் இன்று விராட் கோலி பாராட்டும் அளவுக்கு அசத்தியுள்ளது குறிப்பிட்டது.

Advertisement