இங்கிலாந்தில் பும்ரா இல்லனா என்ன? இந்தியாவின் ஹீரோவாக பும்ராவின் வரலாற்று சாதனையை சமன் செய்த சிராஜ்

Mohammed Siraj 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 – 2 என்ற கணக்கில் சமன் செய்தது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற்ற அத்தொடரின் முதல் போட்டியில் இந்தியா 5 சதங்களை அடித்தும் பரிதாபமாக தோற்றது. ஆனால் அடுத்தப் போட்டியில் இங்கிலாந்து துவம்சம் செய்த இந்தியா 366 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

அந்தப் போட்டியில் பும்ரா விளையாடாததால் இந்தியா தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு பதிலாக விளையாடிய ஆகாஷ் தீப் 10 விக்கெட்டுகளை எடுத்து இந்தியாவின் வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார். அதே போல முகமது சிராஜூம் 6 விக்கெட்டுகள் எடுத்து இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

இந்தியாவின் ஹீரோ சிராஜ்:

3வது போட்டியில் இந்திய அணி போராடி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. 4வது போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கில், ராகுல், சுந்தர், ஜடேஜா ஆகியோரின் போராட்டத்தால் இந்தியா போராடி அப்போட்டியை டிரா செய்தது. கடைசி போட்டியின் கடைசி நாளில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 35 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.

அதனால் இந்திய அணி கண்டிப்பாக தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் கடைசி நாளில் நெருப்பாக பௌலிங் செய்த இந்திய அணி 28 ரன்களை மட்டும் கொடுத்து எஞ்சிய 4 விக்கெட்டுகளையும் எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்கு 5 விக்கெட்டுகள் எடுத்த முக்கிய பங்காற்றிய முகமது சிராஜ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

பும்ரா இல்லனா என்ன சிராஜ் இருக்காரு:

உண்மையில் பும்ரா விளையாடாததால் 5வது போட்டியிலும் இந்தியா வெல்லாது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்தப் போட்டியிலும் சிராஜ் மொத்தமாக 9 விக்கெட்டுகளை எடுத்து இந்தியாவை வெற்றி பெற வைத்துள்ளார். மேலும் மொத்தமாக இத்தொடரில் அவர் 23 விக்கெட்டுகள் எடுத்து அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரராக சாதனை படைத்துள்ளார்.

இதையும் படிங்க: 10க்கு 10 கூஸ்பம்ஸ்.. அவர் எப்போவுமே இந்திய அணியை கீழே விட்டதில்லை.. சச்சின், கங்குலி பாராட்டு

இதன் வாயிலாக இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் என்ற பும்ராவின் வரலாற்றுச் சாதனையை சிராஜ் சமன் செய்துள்ளார். இதற்கு முன் 2021 – 22 இங்கிலாந்து தொடரில் பும்ராவும் இந்தியாவுக்காக 23 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். அந்த வகையில் பும்ரா இல்லாவிட்டால் என்ன? இங்கிலாந்து மண்ணில் இந்தியாவை நான் வெற்றி பெற வைத்து காட்டுகிறேன் என்பதை சிராஜ் நிரூபித்துள்ளார் என்றால் மிகையாகாது.

Advertisement