- Advertisement -
இந்திய கிரிக்கெட்

மிஸ்ஸான ஆர்சிபி 49 ரெக்கார்ட்.. 12க்கு 10 தோல்வி.. அமெரிக்காவில் திணறும் மும்பை.. மிரட்டிய ஃபிரீடம் அணி

ஐபிஎல் போல அமெரிக்காவில் மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அதனுடைய 2024 சீசனில் ஜூலை 17ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 6:00 மணிக்கு டாலஸ் நகரில் 14வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் மற்றும் வாஷிங்டன் ஃப்ரீடம் அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் எம்ஐ முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய வாஷிங்டன் அணிக்கு கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 8 (10) ரன்களில் ரசித் கான் சுழலில் சிக்கினார். ஆனால் மறுபுறம் நட்சத்திர வீரர் டிராவிஸ் ஹெட் தம்முடைய ஸ்டைலில் அதிரடியாக விளையாடினார். அவருடன் ஜோடி சேர்ந்த ஆண்ட்ரீஸ் கவுஸ் நிதானமாக பேட்டிங் செய்தார்.

- Advertisement -

அமெரிக்காவில் திணறல்:
அந்த வகையில் இரண்டாவது விக்கெட்டுக்கு 73 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடியில் ஹெட் அரை சதமடித்து 54 (33) ரன்களில் அவுட்டானார். அவருடன் சேர்ந்து விளையாடிய ஆண்ட்ரீஸ் கவுஸ் தம்முடைய பங்கிற்கு அரை சதமடித்து 59 (48) ரன்களில் ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து மிடில் ஆர்டரில் ரச்சின் ரவீந்திர அதிரடியாக 31 (14) ரன்களும் கிளன் மேக்ஸ்வெல் 15 (14) ரன்களும் எடுத்தனர்.

அதனால் 20 ஓவரில் வாஷிங்டன் 181/5 ரன்கள் எடுத்த நிலையில் எம்ஐ சார்பில் அதிகபட்சமாக கேப்டன் கைரன் பொல்லார்ட் மற்றும் ரசித் கான் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 183 ரன்களை துரத்திய எம்ஐ நியூயார்க் அணிக்கு துவக்க வீரர்கள் ஸ்டீவன் டைலர் 0, ஜஹாங்கிர் 3 ரன்களில் மார்கோ யான்சென் வேகத்தில் அவுட்டானார்கள். அதைத்தொடர்ந்து மோனக் பட்டேல் 4, தேவாலட் ப்ரேவிஸ் 2 ரன்களில் ஜஸ்திப் சிங் வேகத்தில் அவுட்டானார்கள்.

- Advertisement -

போதாகுறைக்கு மிடில் ஆர்டரில் அடித்து நொறுக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிக்கோலஸ் பூரான் 4, கேப்டன் பொல்லார்ட் 4, ரசித் கான் 7 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். அதனால் 43/7 என சரிந்த அந்த அணி ஆர்சிபி’யின் 49 ஆல் அவுட் சாதனையை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது தோற்றாலும் பரவாயில்லை என்பது போல் அதிரடி காட்டிய ரோமாரியா செபார்ட் 25 (14) ரன்களும் ட்ரெண்ட் போல்ட் 16 (13) ரன்களையும் விளாசி காப்பாற்றினார்கள்.

அதனால் தப்பிய எம்ஐ நியூயார்க் 13.3 ஓவரில் 88 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி படுதோல்வியை சந்தித்தது. கடந்த வருடம் நிக்கோலஸ் பூரான் தலைமையில் சாம்பியன் பட்டம் வென்ற அந்த அணி இம்முறை பொல்லார்ட் தலைமையில் 5 போட்டிகளில் 1 வெற்றியும் 3 தோல்வியும் பதிவு செய்துள்ளது. அதனால் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் திணறும் அந்த அணி பிளே ஆஃப் செல்வது 90% கடினமாகியுள்ளது.

இதையும் படிங்க: இதான் நம்ம டெம்ப்ளேட்.. வராதவங்களை விட்றலாம்.. முதலில் அந்த மாதிரி வீரர்களை கண்டறியனும்.. கம்பீர் பேட்டி

சொல்லப்போனால் துபாயில் நடைபெறும் ஐஎல் டி20 மற்றும் இத்தொடரையும் சேர்த்து பொல்லார்ட் தலைமையில் கடைசியாக விளையாடிய 12 போட்டிகளில் மும்பை அணி 10 தோல்விகளை சந்தித்துள்ளது. மறுபுறம் 94 ரன்கள் வித்தியாசத்தில் மிரட்டலான வெற்றி பெற்ற வாஷிங்டன் ஃப்ரீடம் 5 போட்டியில் 4வது வெற்றியை பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. அந்த அணிக்கு அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 2, மார்கோ யான்சேன் 2, லாக்கி பெர்குசன் 2, ஜஸ்தீப் சிங் 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

- Advertisement -