இந்திய அணியில் இடம்பிடித்த கையோடு நடராஜன் வீட்டில் நடந்த விசேஷம் – முதல் ஆளாக வாழ்த்துக்களை சொன்ன வார்னர்

Nattu-2

தமிழ்நாட்டின் சேலம் சின்னப்பம்பட்டியில் பிறந்து 20 வயது வரை டென்னிஸ் பந்து கிரிக்கெட் விளையாடிவிட்டு அதன் பின்னர் தனது திறமையை உயர்த்தி சர்வதேச கிரிக்கெட்டில் நுழைந்து அசத்தி கொண்டிருப்பவர் தங்கராசு நடராஜன். தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் தனது திறமையை நிரூபித்ததன் மூலம் தற்போது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஐபிஎல் தொடரில் ஆடிக் கொண்டிருக்கிறார்.

சொல்லப்போனால் அந்த அணியின் தற்போதைய முன்னணி வேகப்பந்து வீச்சாளர் இவர்தான். இடது கை வேகப்பந்து வீச்சாளர் கடந்த இரண்டு வருடங்களாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம்பெற்றிருந்தார் அந்த அணியில் அவருக்கு சரியான வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை. ஆனால் பந்து வீச்சின் சொர்க்கபுரியாக இருக்கும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அவரை இந்த வருட ஏலத்தில் எடுத்து தற்போது அவரை முன்னணி வேகப்பந்து வீச்சாளராக மாற்றியிருக்கிறது.

குறிப்பாக ஹைதராபாத் அணி பல போட்டிகளில் வெற்றிபெற இவர் தன்னந்தனியாக காரணமாக இருந்திருக்கிறார் தற்போது வரை 15 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார் நடராஜன். இந்நிலையில் அவரது வீட்டில் ஒரு நற்செய்தி நடைபெற்று இருக்கிறது. இந்த செய்தியை எலிமினேட்டர் போட்டி முடிந்தவுடன் பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் வெளியிட்டார்.. மேலும் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து இருக்கிறார்…

Nattu

நடராஜன் மற்றும் அவரது மனைவி இருவரும் தற்போது பெற்றோர்களாக மாறப்போகின்றனர். அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் இன்று காலை அவருக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இந்த வெற்றி அந்த குழந்தைக்கு தான் சேரும் இப்படி ஒரு சிறந்த பரிசை அந்த குழந்தைக்கு கிடைத்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார் டேவிட் வார்னர்.

- Advertisement -

nattu

அதுமட்டுமின்றி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் தொடருக்காக இந்திய அணியில் கூடுதல் பவுலராகவும் நடராஜன் செல்ல இருப்பது குறிப்பிடத்தக்கது.