மைக்கேல் வாகன், டேவிட் வார்னர் மனைவி இருவரும் ட்விட்டரில் மோதல் – காரணம் இதுதான் !

candice
- Advertisement -

ஏற்கனவே பால் டேம்பரிங் பிரச்சனையில் சிக்கி ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னரின் பதவியும் பறிக்கப்பட்டது.இந்நிலையில் தற்போது சமூகவலைத்தளமான டிவிட்டரில் டேவிட் வார்னரின் மனைவி மைக்கேல் வோகனுடன் சூடான விவாதம் செய்துள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

டேவிட் வார்னரின் மனைவி கேன்டைஸ் முன்னாள் இங்கிலாந்து அணியின் கேப்டனான மைக்கேல் வாகனுடன் டிவிட்டரில் மல்லுக்கு நின்றுள்ளார்.மைக்கேல் வாகன் தனது டிவிட்டர் பதிவில் இந்த தொடரில் ஆஸ்ஸி வீரர்கள் தேவையில்லாத பிரச்சனைகளை உருவாக்கிடும் விதத்தில் நடந்துகொள்கின்றனர் என்று எழுதியிருந்தார்.

மூன்றாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பும்போது தென்ஆப்பிரிக்க ரசிகர் ஒருவர் வார்னரை கிண்டல் செய்ததாகவும் அதற்கு வார்னர் வாக்குவாதம் செய்ததாகவும் பின்னர் இதுகுறித்து ஆஸ்திரேலிய அணி சம்மந்தப்பட்ட ரசிகர் மீது நடவடிக்கை எடுக்கும்படி தென்ஆப்பிரிக்காவிடம் புகாரளித்ததாகவும் அதுகுறித்து தான் மைக்கேல் வாகன் இப்படி டிவீட் போட்டிருந்தார்.இதற்கு தான் தற்போது வார்னரின் மனைவி பதிலுக்கு டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Advertisement