வில்லியம்சன் பற்றி கேட்ட கேள்விக்கு பொறுப்பற்ற பதிலை கூறி மழுப்பிய வார்னர் – கேப்டனா இருந்துட்டு இப்படியா பேசுவீங்க ?

Williamson

நடப்பு ஐபிஎல் தொடரின் 23 ஆவது லீக் போட்டியானது டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் தோணி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையே நடைபெற்றது. இப்போட்டியில் முதல் இன்னிங்சை ஆடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 171 ரன்கள் எடுத்தது. பின்பு இரண்டாவது இன்னிங்சை ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18.3 ஓவர்களில் 173 ரன்களை எடுத்து ஹைதராபாத் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

CSKvsSRH

இந்நிலையில் இந்த போட்டியில் டேவிட் வார்னரின் கேப்டன்சியின் மீது ரசிகர்கள் விமர்சனம் வைத்துள்ளனர். இந்தத் தொடரின் ஆரம்ப போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக மணிஷ் பாண்டே ஒன்டவுனில் களமிறங்கி வந்தார். ஆனால் அவர் ரன் குவிக்க தவறியதோடு மட்டுமல்லாமல் அதிரடியாகவும் விளையாடாமல் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் கடந்த இரண்டு போட்டிகளில் அவர் அணியிலிருந்து ஓரம்கட்டப்பட்டார்.

அவருக்குப் பதிலாக அந்த இடத்தில் கடந்த இரண்டு போட்டிகளாக கேன் வில்லியம்சனை களமிறக்கியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. அவரும் அந்த இரண்டு போட்டிகளிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அந்த இடத்திற்கு நான் தகுதியானவன் என்பதை நிரூபித்து இருந்தார். இதற்கிடையில் நேற்றைய போட்டியில் மனிஷ் பாண்டேவை மீண்டும் அணிக்குள் கொண்டுவந்த அந்த அணியின் கேப்டன் டேவிட் வார்னர், மீண்டும் அவரை ஒன்டவுன் ஆர்டரிலேயே களமிறக்கி விட்டு, அந்த இடத்தில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருந்த கேன் வில்லியம்சனை பின் வரிசைக்கு அனுப்பினார்.

williamson 1

மணிஷ் பண்டே அணிக்குள் இணைந்தாலும் சிறப்பாக செயல்பட்டு வரும் கேன் வில்லியம்சனுக்கு தான் ஒன்டவுன் ஆர்டரில் விளையாட வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்த்திருந்த அந்த அணியின் ரசிகர்களுக்கும், கிரிக்கெட் விமர்சகர்களுக்கும் வார்னர் இப்படி செய்தது பேரதிர்ச்சியாக இருந்தது. நேற்று பேட்டிங் ஆடிய மணிஷ் பண்டே சிறப்பாக விளையாடி இருந்தாலும் அவரால் முக்கியமான நேரத்தில் அதிரடியாக ஆட முடியாமல் விக்கெட்டைப் பரிகொடுத்துவிட்டார்.

- Advertisement -

பின்பு வந்த கேன் வில்லியம்சன் அதிரடியாக ஆடி 10 பந்துகளில் 26 ரன்கள் அடித்ததால்தான் அந்த அணியால் 171 ரன்கள் அடிக்க முடிந்தது. போட்டி முடிந்ததும் இந்த முடிவைப் பற்றி வார்னரிடம் கேள்வி எழுப்பியபோது, கேன் வில்லியம்சன் 4வது இடத்தில் களமிறங்கிதான் விளையாட வேண்டும். அதுதான் அவருடைய வேலை மேலும், நாங்களும் இங்கே விளையாடதான் வந்திருக்கிறோம் என்று பொறுப்பற்ற முறையில் பதில் வழங்கினார்.

williamson 1

வார்னரின் இந்த பதிலைக் கேட்ட சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் ரசிகர்கள் அவரின் கேப்டன்சியைப் பற்றி சமூகவலைத்தளங்களில் விமர்ச்சனங்களை வைத்து வருகின்றனர். கடந்த போட்டியில் டெல்லி அணியை எதிர் கொண்ட ஐதராபாத் அணயில் ஒன்டவுனாக களமிறங்கிய கேன் வில்லியம்சன் அந்த போட்டியில் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.