பெங்களூரு அணியை காலி செய்து வெளியேற்ற இவர்கள் 2 பேரே காரணம் – வெற்றி குறித்து வார்னர் பெருமிதம்

Warner

ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் வார்னர் முதலில் பந்து வீசுவதாக தீர்மானித்தார்.

SRHvsRCB

அதன்படி முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்களை மட்டுமே குவித்தது. அதிகபட்சமாக டிவில்லியர்ஸ் 56 ரன்களையும், பின்ச் 32 ரன்களை குவித்தனர். அவர்களைத் தவிர மற்ற யாரும் சிறப்பாக விளையாடவில்லை. சன்ரைசர்ஸ் அணி சார்பாக ஹோல்டர் சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அதன் பின்னர் 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன்ரைசர்ஸ் அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக வில்லியம்சன் ஆட்டமிழக்காமல் 50 ரன்களும், ஜேசன் ஹோல்டர் 24 ரன்களும் குவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் அணி அடுத்து டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.

holder

இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் கூறுகையில் : நாங்கள் டாப் 3 அணிகளை வீழ்த்தினால் மட்டுமே பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்று தெரியும். அதே போன்று அவர்களை வீழ்த்தும் திறனும் எங்களிடம் உள்ளது என்று நாங்கள் நம்பினோம். நடராஜன் மற்றும் ரஷீத் ஆகியோர் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தனர்.

- Advertisement -

எங்களது அணிக்கு அவர்கள் இருவரும் தொடர்ந்து திருப்பங்களை கொடுத்து வருகின்றனர். ஹோல்டர் மற்றும் சந்தீப் ஆகியோர் 5 ஓவர்களை துவக்கத்தில் சிறப்பாக வீசுகின்றனர். அதன்பிறகு ரஷீத் மாற்றம் நடராஜன் ஆகியோர் மிடில் ஓவர்களில் சிறப்பாக பந்துவீசி வருகின்றனர்.

Nattu

பேட்டிங்கில் வில்லியம்சன் எங்களுக்கு ரன் ஸ்கோரராக எப்பொழுதும் திகழ்கிறார். போட்டியின் சூழ்நிலைக்கேற்ப விளையாடுவதில் அவர் வல்லவர். அவர் விளையாடிய பேட்டிங் இதுபோன்ற மைதானங்களில் அவரால் மட்டுமே இப்படி விளையாட முடியும் என்று வெற்றி குறித்து வார்னர் கூறியது குறிப்பிடத்தக்கது.