ஸ்டீவ் ஸ்மித் கிட்ட இருக்கும் வினோதமான பழக்கம். தூங்கவே விட மாட்டாரு – டேவிட் வார்னர் பகிர்ந்த சுவாரசிய தகவல்

கொரானா பரவல் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடரில் பங்கு பெற்றிருந்த ஆஸ்திரேலிய வீரர்கள் அனைவரும் முதலில் மாலத்தீவில் தங்க வைக்கப்பட்டு அதற்குப் பின்னர் அவர்களை அவர்களின் நாட்டுக்கு பத்திரமாக அனுப்பி வைத்தது பிசிசிஐ. அங்கு சென்ற பின் தனிமை முகாமில் இருந்த ஆஸ்திரேலிய வீரர்கள் சில நாட்களுக்கு முன்னர்தான் தங்களின் குடும்பத்துடன் இணைந்தனர். இந்நிலையில் அந்நாட்டு தனியார் இணையதளம் ஒன்றிற்கு பேட்டியளித்திருக்கும் ஆஸ்திரேலிய வீரரான டேவிட் வார்னர், மற்றொரு ஆஸ்திரேலிய வீரரான ஸ்டீவ் ஸ்மித்தின் விசித்திரமான பழக்கத்தை பற்றியும் அதனால் மற்ற வீரர்கள் தங்களுடைய தூக்கத்தை இழந்து தவிப்பார்கள் என்றும் ஒரு சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார். இது குறித்து பேசிய அவர்,

warner 1

வீரர்கள் அனைவரும் தங்கும் ஓட்டலில், எங்கள் அறைக்கு மேல் உள்ள அறையில் ஸ்டீவ் ஸ்மித் தங்கினார் என்றால், அன்று எங்களால் நிச்சயமாக நிம்மதியாக உறங்கவே முடியாது. அதற்கு அவருடைய விசித்திரமான பழக்கமே காரணமாக இருக்கிறது. இரவு நேர தூக்கத்திற்கு முன்பு கூட அவர் கண்மூடித்தனமாக தனது பேட்டை சோதித்து பார்ப்பார். பேட்டின் எடையை சரியாக உணர்வதற்கும், போட்டியின்போது எந்த பேட்டில் விளையாடுவது என்பது குறித்து தெரிந்து கொள்வதற்காகவும் அவர் அப்படி ஒரு சோதனையை தனது அறையில் செய்து பார்ப்பார்.

- Advertisement -

அந்த சத்தத்தைக் கேட்டு முதலில் நாங்கள் அறையை சுத்தம் செய்யும் நபர்தான் இப்படி செய்கிறார் என்று நினைப்போம். ஆனால் அதற்குப் பிறகு தான் ஸ்டீவ் ஸ்மித் மேல் அறையில் தங்கி இருக்கிறார் என்பது தெரிய வரும் என்றும் அவர் கூறினார். இதற்கு முன்னராக தனது வீட்டிற்கு சென்ற ஸ்டீவ் ஸ்மித், அங்கு ஒரு அறையில் தன் கண்களை துணியால் மூடிக் கொண்டு சரியான பேட்டை தேர்ந்தெடுக்க செய்து பார்க்கும் பரிசோதனையை புகைப்படமாக எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தார், அவரின் மனைவியான டேனி வில்ஸ்.

Smith

அந்த பேட்டியில் இந்தியாவில் கொரனாவின் தாக்கம் குறித்து பேசிய டேவிட் வார்னர், ஐபிஎல் தொடரின்போது இந்திய மக்கள் ஆக்சிஜன் கிடைக்காமல் தவித்து வந்ததை தொலைக்காட்சியில் பார்த்தேன். அது உண்மையிலேயே மிகவும் திகிலூட்டும் ஒரு விடயமாக இருந்த்து. எனவே வீட்டிற்கு சென்றுவிடுவது தான் சிறந்தது என்று எண்ணினேன்.

- Advertisement -

Smith

மேலும் கொரனாவால் இறந்த தங்களது உறவினர்களின் சடலங்களை எரிக்க மக்கள் வரிசையில் நின்றதை பார்த்த போது, மனிதாபிமான பார்வையில் எனக்கு அது மிகுந்த வருத்தத்தை அளித்தது என்றும் அவர் கூறியிருக்கிறார்.

Advertisement